மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு சந்தை! கொரோனாவிலிருந்து காக்க சிசிடிவி கேமராக்கள் வளையத்தில் சந்தை..

 

மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு சந்தை! கொரோனாவிலிருந்து காக்க சிசிடிவி கேமராக்கள் வளையத்தில் சந்தை..

கொரோனா காரணமாக மூடப்பட்ட சென்னை கோயம்பேடு காய்கறி, மலர் சந்தை திறக்கப்பட்டது.

சென்னையில் கொரோனா அதிகமாக பரவுவதற்கு முக்கிய காரணமாக அமைந்த சென்னை கோயம்பேடு மார்க்கெட்டை மூடுமாறு சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு பிறப்பித்தது. அதற்கு மாறாக திருமழிசையில் காய்கறி சந்தை அமைக்கலாம் என்றும் அறிவுறுத்தியது. அதன் படி, திருமழிசைக்கு காய்கறி சந்தை மாற்றப்பட்டதால் கோயம்பேடு மார்க்கெட் 4 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து வியாபாரிங்கள் தொடர்ந்து விடுத்த கோரிக்கையின் பேரில் கோயம்பேடு மார்க்கெட் இன்று திறக்கப்பட்டது

மீண்டும் திறக்கப்பட்டது கோயம்பேடு சந்தை! கொரோனாவிலிருந்து காக்க சிசிடிவி கேமராக்கள் வளையத்தில் சந்தை..

கொரோனா காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனை
அங்காடிகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டன. இன்று இரவு 8 மணியில் இருந்து செயல்பட தொடங்குகிறது. கடைகளுக்கு பூஜை செய்து மொத்த விற்பனை அங்காடி உரிமையாளர்கள் விற்பனையை தொடங்குகின்றனர். 194 மொத்த விற்பனை கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. அதிகாலை 5 மணி முதல் இரவு 9மணி வரை காய்கறிகள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உடல் பரிசோதனை செய்யவும் ஒவ்வொரு கடை முன்பு கிருமிநாசினி வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்த காய்கறி சந்தையில் சரக்கு வாகனங்கள் இரவு 9 முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. சந்தை முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தனிமனித இடைவெளி கடைபிடிக்கப்படுகிறதா என கண்காணிக்கபடுகிறது