கடம்பூர் ராஜுவை தொடர்ந்து.. டிடிவி தினகரனுக்கு காத்திருக்கும் அடுத்த தலைவலி!

 

கடம்பூர் ராஜுவை தொடர்ந்து.. டிடிவி தினகரனுக்கு காத்திருக்கும் அடுத்த தலைவலி!

2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வென்ற டிடிவி தினகரன், இந்த முறை கோவில்பட்டி தொகுதியை சூஸ் செய்திருக்கிறார். அங்கு அதிமுக வேட்பாளராக அமைச்சர் கடம்பூர் ராஜு களமிறங்குகிறார். திமுக கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் சார்பில் கே.ஸ்ரீனிவாசன் போட்டியிடுகிறார். தினகரனுக்கு எதிராக களமிறங்கும் இரண்டு வேட்பாளர்களுமே அவருக்கு டஃப் கொடுக்கக் கூடியவர்கள் தான்.

கடம்பூர் ராஜுவை தொடர்ந்து.. டிடிவி தினகரனுக்கு காத்திருக்கும் அடுத்த தலைவலி!

கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் கோவில்பட்டியில் கடம்பூர் ராஜு வெற்றி பெற்றார். 429 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தோல்வியை தழுவினார். இதனால் கடம்பூர் ராஜுவை வீழ்த்துவது எளிதான காரியம் என டிடிவி தினகரன் எண்ணிக் கொண்டிருக்கிறார். அந்த தொகுதியில் இருக்கும் தேவர், நாயக்கர், நாடார், தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் வாக்குகளை டார்கெட்டாக வைத்து களமிறங்கியிருக்கிறாராம்.

கடம்பூர் ராஜுவை தொடர்ந்து.. டிடிவி தினகரனுக்கு காத்திருக்கும் அடுத்த தலைவலி!

தினகரனுக்கு கடம்பூர் ராஜு மட்டும் தான் டஃப் கொடுப்பார் என வெகுவாக பேசப்பட்டு வரும் நிலையில், திமுக சைலண்டாக காய் நகர்த்தியுள்ளது. தனது கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட்டுக்கு இந்த தொகுதியை ஒதுக்கியுள்ளது. அக்கட்சியில் இருந்து ஸ்ரீனிவாசன் கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். ஸ்ரீனிவாசன் தான் இப்போது டிடிவி தினகரனுக்கு தலைவலியாக இருப்பதாக கூறப்படுகிறது. இவர் பல ஆண்டுகளாக அந்த தொகுதி மக்களுக்கு பல நலத்திட்டங்களை செய்து கொடுத்திருக்கிறாராம். தெருவுக்கு தெரு எழுத்தாளர்களைக் கொண்டிருக்கும் கோவில்பட்டியின் ஆதரவு எல்லாம் ஸ்ரீனிவாசனுக்கு தானாம்.

அதனால், கடம்பூர் ராஜுவை தோற்கடிப்பதை விட ஸ்ரீனிவாசனை தோற்கடிப்பது தான் சிரமம் என்கிறார்கள் சிலர். ஸ்ரீனிவாசனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. கோவில்பட்டி தொகுதி மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்கள் என பொருந்திருந்து பார்ப்போம்…!