“ஸ்டாலின் கட்டளைய மீற முடியல… வேறு வழியில்லாம பிரச்சாரம் செய்றேன்”

 

“ஸ்டாலின் கட்டளைய மீற முடியல… வேறு வழியில்லாம பிரச்சாரம் செய்றேன்”

காங்கிரஸ் கட்சி மட்டுமல்லாமல் தமாகவிலும் செல்வாக்கு வாய்ந்த அரசியல் தலைவராக இருந்தவர் கோவை தங்கம். நடைபெறவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் கோவை தங்கத்தை இருமுறை எம்எல்ஏவாக்கிய ஆதர்ச தொகுதியான வால்பாறையை அதிமுக தமாகவுக்கு ஒதுக்கவில்லை. இதனால் கடும் அதிருப்தியடைந்த அமைச்சர் வேலுமணி தான் வால்பாறையை ஒதுக்காததற்குக் காரணம் என்றும், ஜிகே வாசனும் தன்னைக் கைவிட்டார் என்று கூறி தமாகவிலிருந்து அதிரடியாக விலகினார்.

“ஸ்டாலின் கட்டளைய மீற முடியல… வேறு வழியில்லாம பிரச்சாரம் செய்றேன்”

சுயேச்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்த தங்கம், ஸ்டாலினின் வேண்டுகோளுக்கிணங்க அம்முடிவைக் கைவிட்டார். பின்னர் ஸ்டாலின் முன்னிலையில் மீண்டும் திமுகவுடன் கைகோர்த்தார். அதேபோல கோவையிலும் குறிப்பாக வால்பாறையிலும் வேட்பாளர்களுக்குப் பிரச்சாரம் செய்ய ஸ்டாலின் கூறியதால் பிரச்சாரம் செய்துவருகிறார். வால்பாறையில் 2011ஆம் ஆண்டு அவரைத் தோற்கடித்த சிபிஐ வேட்பாளர் ஆறுமுகம் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாகத் தற்போது கோவை தங்கம் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

“ஸ்டாலின் கட்டளைய மீற முடியல… வேறு வழியில்லாம பிரச்சாரம் செய்றேன்”

இந்த அனுபவம் குறித்து தனியார் நாளிதழுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், “ஆறுமுகத்துக்காக நான் பிரச்சாரம் செய்ததற்கான காரணம், மு.க.ஸ்டாலின் மீது நான் வைத்திருக்கும் பாசம், விசுவாசம். நன்றி. இப்படிச் சொல்லிக்கொண்டே போகலாம். திமுக ஆட்சிக் காலத்தில், வால்பாறை தொகுதி மக்களுக்கு எம்எல்ஏ என்ற முறையில் நான் கேட்டதெல்லாம் செய்து கொடுத்தவர் ஸ்டாலின். அதனால்தான் தொகுதி மக்களிடம் எனக்கு மிகப்பெரிய மரியாதை கிடைத்தது. அவர் எதைச் சொன்னாலும் செய்யும் எண்ணம் இயல்பாகவே என்னிடம் இருந்து வந்தது.

“ஸ்டாலின் கட்டளைய மீற முடியல… வேறு வழியில்லாம பிரச்சாரம் செய்றேன்”

என்னைத் தோற்கடித்தவருக்கு பிரச்சாரம் செய்வது காலத்தின் கட்டாயம். ஸ்டாலின் என்ன சொல்கிறாரோ, அதைக் கேட்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டேன். அவர்தான் எனக்கு இனிமேல் தலைவர். எனக்காக இரண்டு நாள் வால்பாறை பிரச்சாரத்துக்கு சென்று வாருங்கள் என்று அவரே சொன்னார். உண்மையில் எனக்கு போக விருப்பமே இல்லை. இருந்தாலும் தலைவர் சொன்னதைச் செய்வது என் கடமை. அதைத்தான் நான் செய்தேன்.அதற்கு பிரம்மாண்டமான வரவேற்பு கிடைத்தது. வாசனால் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியை நடத்தவே முடியாது. நடத்த மாட்டார்” என்றார்.