கொத்தவால் சாவடியில் மளிகை கடைகள் இன்று முதல் வழக்கம் போல் இயங்கும்!

கொத்தவால் சாவடியில் மளிகை கடைகள் இன்று முதல் வழக்கம் போல் இயங்கும்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் 1515 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,667 ஆக அதிகரித்துள்ளது.

கொத்தவால் சாவடியில் மளிகை கடைகள் இன்று முதல் வழக்கம் போல் இயங்கும்!

அதேபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 269 ஆக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டுள்ளது. குறிப்பாக கோயம்பேடு, காசிமேடு மீன் மார்க்கெட்,கொத்தவால் சாவடி மூடப்பட்டுள்ளது.

கொத்தவால் சாவடியில் மளிகை கடைகள் இன்று முதல் வழக்கம் போல் இயங்கும்!

இந்நிலையில் சென்னை கொத்தவால் சாவடியில் மளிகை கடைகள் இன்று முதல் வழக்கம் போல் இயங்கும் என தமிழக உணவு தானிய வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொரோனா தடுப்பு பணியாக மார்க்கெட் ஒரு வார காலம் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்ட  நிலையில் மக்களின் நலன் கருதி மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மொத்த வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.