வட்டி வருவாய் 6 சதவீதம் அதிகரிப்பு.. கோடக் மகிந்திரா வங்கி லாபம் ரூ.1,642 கோடி…

 

வட்டி வருவாய் 6 சதவீதம் அதிகரிப்பு.. கோடக் மகிந்திரா வங்கி லாபம் ரூ.1,642 கோடி…

கோடக் மகிந்திரா வங்கி 2021 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,641.92 கோடி ஈட்டியுள்ளது.

நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான கோடக் மகிந்திரா வங்கி தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி நிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது. கோடக் மகிந்திரா வங்கி 2021 ஜூன் காலாண்டில் தனிப்பட்ட முறையில் நிகர லாபமாக ரூ.1,641.92 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 32 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கி நிகர லாபமாக ரூ.1,244.45 கோடி ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய் 6 சதவீதம் அதிகரிப்பு.. கோடக் மகிந்திரா வங்கி லாபம் ரூ.1,642 கோடி…
கோடக் மகிந்திரா வங்கி

கடந்த ஜூன் காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கியின் நிகர வட்டி வருவாய் (வட்டி வரவுக்கும், செலவுக்கும் இடையிலான வித்தியாசம்) ரூ.3,942 கோடியாக உயர்ந்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 6 சதவீதம் அதிகமாகும். 2020 ஜூன் காலாண்டில் கோடக் மகிந்திரா வங்கி நிகர வட்டி வருவாயாக ரூ.3,724 கோடி ஈட்டியிருந்தது.

வட்டி வருவாய் 6 சதவீதம் அதிகரிப்பு.. கோடக் மகிந்திரா வங்கி லாபம் ரூ.1,642 கோடி…
கோடக் மகிந்திரா வங்கி

கடந்த ஜூன் காலாண்டு இறுதி நிலவரப்படி, கோடக் மகிந்திரா வங்கியின் மொத்த வாராக்கடன் 3.56 சதவீதமாகவும், நிகர வாராக்கடன் 1.28 சதவீதமாகவும் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று மும்பை பங்குச் சந்தையில் பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது கோடக் மகிந்திரா வங்கி பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 0.82 சதவீதம் குறைந்து ரூ.1,654.95ஆக இருந்தது.