பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் பொம்மைகள் – தென்கொரிய கால்பந்து மைதானத்திற்கு அபராதம்

 

பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் பொம்மைகள் – தென்கொரிய கால்பந்து மைதானத்திற்கு அபராதம்

சியோல்: கால்பந்து மைதானத்தில் பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் வகையில் பொம்மைகளை வைத்த மைதானத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலகம் முழுக்க விளையாட்டு போட்டிகள் பலவும் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. சில போட்டிகள் ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்குக்குள் நடைபெறுகின்றன. மேலும் கால்பந்து போட்டிகளையும் மூடிய அரங்கிற்குள் நடத்திக் கொள்ள கால்பந்து சம்மேளனம் அனுமதி வழங்கியுள்ளது.

அந்த வகையில், தென் கொரியாவில் எப்.சி சியோல் என்ற கிளப் உள்ளூர் கால்பந்து போட்டியை ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்கிற்குள் நடத்தியது. அப்போது மைதானத்தின் இருக்கைகளில் பாலியல் தொழிலை விளம்பரப்படுத்தும் விதமாக பெண் பொம்மைகளை ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. அவ்வாறு வைக்கப்பட்ட 30 பொம்மைகளில் இரண்டு பொம்மைகள் மட்டுமே ஆண் பொம்மைகள். மைதானத்தின் இந்த ஏற்பாடு தற்போது சர்ச்சை ஆகியுள்ளது. இதனை தொடர்ந்து சர்வதேச கால்பந்து ஒழுங்கு கட்டுப்பாட்டு வாரியம் சம்மந்தப்பட்ட மைதானத்திற்கு அந்நாட்டு மதிப்பில் 100 மில்லியன் தென்கொரிய வோன் பணத்தை அபராதமாக விதித்துள்ளது. இந்நிலையில், நடந்த தவறுக்கு ரசிகர்களிடம் எப்.சி சியோல் கிளப் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளது.