பாலியல் தொழிலாளர்களை பாடாய் படுத்தும் கொரானா-கஸ்டமர் வராததால் பெரும் கஷ்டத்தில் வாடும் நிலை ..

கொரானாவால் எந்த தொழிலையும் மாஸ்க் போட்டுகொண்டு,ம் சமூக இடைவெளியுடனும் செய்யலாம் .ஆனால் பாலியல் தொழிலை அப்படி நடத்த முடியுமா ?முடியாது ,அதனால் அதை தவிர வேறு தொழில் எதுவும் தெரியாத பாலியல் தொழிலாளர்கள் மிகவும் வறுமையான நிலையில் உலகம் முழுவதும் வாடுகின்றனர் .
ஒரே இரவில் லட்சக்கணக்கில் சம்பாதித்த பாலியல் பெண்கள் எல்லாம் இப்போது ஆயிரம் ,ஐநூறுக்கு கூட கஸ்டமர் வராமல் கஷ்டப்படுகிறர்கள் .சிலர் பணத்தை சேமித்து வைத்திருந்ததால் இந்த நேரத்தில் சமாளித்துக்கொள்கிறார்கள் .ஆனால் பலர் அன்றாட தேவைக்கே கஷ்டப்படும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் .


ஜமைக்காவில் பிரெட்டி பேஸ் என்ற 28 வயது பாலியல் தொழிலாளி தன்னுடைய 13 வயது டீனேஜ் மகனுக்காக இந்த பாலியல் தொழிலை செய்து வந்தார் .மகனை நகரத்தில் மிகப்பெரிய பள்ளியில் படிக்க வைக்கிறார் .அதனால் அவன் கேட்கும் பொருட்களை வாங்கி தருவதற்கு ஒற்றை பெற்றோராக இருக்கும் அவர், இந்த தொழிலை செய்து சமாளித்து வந்தார் .ஆனால் மார்ச் மாதம் முதல் ஜமைக்காவில் கொரானா பரவ தொடங்கியதிலிருந்து வாடிக்கையாளர் வருவதை நிறுத்தியதால் ,மகனுக்காக வேறு தொழிலை தேடி போனார் .


ஆனால் இப்போதிருக்கும் பொருளாதார நெருக்கடியில் வேறு எங்கும் வேலை வாய்ப்பு இல்லாததால் வேறு எந்த தொழிலை செய்யவும் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை .இதனால் அவர் மிகவும் மனம் ஒடிந்த நிலையில் கைக்கும் ,வாய்க்கும் வருமானம் போதாமல் கஷ்டப்படுகிறார் .இவரைப்போலவே இந்தியாவிலும் டெல்லி ,மும்பை ,கொல்கத்தா போன்ற பெரு நகரங்களில் உள்ள பல்லாயிரக்கணக்கான பாலியல் தொழிலாளர்கள் மிக மோசமான நிலையில் வறுமையில் வாடுகின்றனர் .என்று ஒழியும் இந்த கொரானா என்று அவர்கள் ஆளில்லா வாசலை பார்த்து காத்துக்கொண்டிருக்கிறார்கள் .

Most Popular

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் வந்தே பாரத் திட்டம் தொடரும்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு பெருந்தொற்றாக உருவெடுத்துள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வந்த நிலையில்,...

பாடகி பிரியங்கா குரலில் டாப் தமிழ் நியூஸ் வழங்கும் கந்த சஷ்டி கவசம் : 10 லட்சம் பார்வையாளர்களை கடந்து சாதனை!

தமிழ் கடவுளாக போற்றப்படும் அற்புத சக்திவாய்ந்த முருகப்பெருமான் உலகம் முழுவதும் உள்ள பக்தர்களை தனது கருணை பார்வையால் ஆட்கொண்டு வருகிறார். கார்த்திகேயரை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் வந்து சேரும். ஆலயம் பலவற்றில் அழகுற...

“பக்கவாதத்தால் படுத்த தாயை ,பக்காவா பிளான் போட்டு கொன்ற மகன்”-அவரின் பிளானை கேட்டா அதிர்ச்சியடைவிங்க..

உத்தரபிரதேசத்தின் சஹரன்பூர் மாவட்டத்தில் உள்ள கானா காது கிராமத்தில் இக்பால் என்ற நபர் தன்னுடைய 80 வயதான பக்கவாதம் பாதிக்கப்பட்ட தாயோடு வசித்து வந்தார் .இந்நிலையில் அவரால் அவரின் தாயை பராமரிப்பது அவருக்கு...

‘என் கணவனை காப்பற்றுங்கள்’.. சாத்தான்குள வழக்கில் கைதான காவலர் பால்துரையின் மனைவி தர்ணா!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை மகனான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் காவலர்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவம் பூதாகரமாக உருவெடுத்ததை தொடர்ந்து சம்பந்தப்பட்ட காவலர்களை கைது செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்...