ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டத்தில் எதிரொலித்த கொங்குநாடு சர்ச்சை; நிர்வாகிகள் வலியுறுத்தியது என்ன?

ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டத்தில் எதிரொலித்த கொங்குநாடு சர்ச்சை; நிர்வாகிகள் வலியுறுத்தியது என்ன?

அதிமுக மாநில நிர்வாகிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கொங்குநாடு விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்ட தகவல்கள் வெளியாகின்றன.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டத்தில் எதிரொலித்த கொங்குநாடு சர்ச்சை; நிர்வாகிகள் வலியுறுத்தியது என்ன?

தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணையமைச்சராக பொறுப்பேற்ற போது அவரை பற்றிய குறிப்புகளில் கொங்குநாடு என்று இடம்பெற்றிருந்தது பேசுபொருளானது. அதாவது, திமுக அரசை பழிவாங்க மத்திய அரசு தமிழகத்தை இரண்டாக பிரிக்க உள்ளதாகவும் கொங்குமண்டலத்தை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்கவுள்ளதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. தனது குறிப்பில் அவ்வாறு இடம்பெற்றது தட்டச்சு பிழை என ஒரே வார்த்தையில் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் எல்.முருகன். எனினும், இந்த விவகாரம் ஓய்ந்தபாடில்லை. பாஜக நிர்வாகிகளின் பேச்சு கொங்கு நாடு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டிருப்பதையே உணர்த்துகிறது.

ஓபிஎஸ் – ஈபிஎஸ் கூட்டத்தில் எதிரொலித்த கொங்குநாடு சர்ச்சை; நிர்வாகிகள் வலியுறுத்தியது என்ன?

இந்த நிலையில், ஓபிஎஸ் ஈபிஎஸ் தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திலும் கொங்குநாடு விவகாரம் எதிரொலித்ததாக அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தில் பங்கேற்ற மேற்கு மற்றும் வடக்கு மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் கொங்குநாடு விவகாரத்தில் பாஜகவுக்கு எதிராக அதிமுக இருப்பதாக வெளிப்படையாக அறிவித்திருக்க வேண்டும் என்றும் பாஜக நிர்வாகிகளுடன் பேசி இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அதுமட்டுமல்லாமல், தேர்தலில் தோல்விக்கான காரணம் பாஜக தான் என்றும் பாஜகவுடன் கூட்டணியில் இருப்பதால் பலர் திமுகவில் இணைவதாகவும் அவர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் இடம் சுட்டிக்காட்டியுள்ளனர். கொங்குநாடு விவகாரம் குறித்து விரைவில் அதிமுக தலைமையிடம் இருந்து அறிக்கை வெளிவருமென எதிர்பார்க்கப்படுகிறது.