கொம்புத்துறை – கடையக்குடி : ஊர் பெயரை மாற்ற இடைக்கால தடை

 

கொம்புத்துறை – கடையக்குடி : ஊர் பெயரை மாற்ற இடைக்கால தடை

திருச்செந்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட கொம்புத்துறை எனும் ஊரில் 500க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனர். அரசு ஆவணங்களில் உள்ள அனைத்து சான்றுகளும் கொம்புத்துறை என்ற பெயரில் தான் உள்ளது. இந்த நிலையில் இல்லாத தென்காசியை சேர்ந்த ஸ்டீபன் என்பவர் கடந்த வருடம் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் கொம்புத்துறை எனும் ஊர் பெயரை கடையக்குடி என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

கொம்புத்துறை – கடையக்குடி : ஊர் பெயரை மாற்ற இடைக்கால தடை

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஊர் பெயர் மாற்றம் குறித்து அமைதிக் கூட்டம் நடத்தி மாவட்ட நிர்வாகம் மனுதாரரின் கோரிக்கை குறித்து முடிவு செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்தநிலையில் திருச்செந்தூர் தாசில்தார் கடந்த மாதம் ஊர் முக்கியஸ்தர்கள் இல்லாமல் சில நபர்களை மட்டும் வைத்து கூட்டம் நடத்தி ஊர் பெயரை மாற்றம் செய்வது என முடிவெடுத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கொம்புத்துறை – கடையக்குடி : ஊர் பெயரை மாற்ற இடைக்கால தடை

தற்போது இதனால் கொம்பு துறையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்று தெரிகிறது. ஆகவே ஊர் பெயர் மாற்றம் குறித்து திருச்செந்தூர் தாசில்தார் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கொம்புதுறையை சேர்ந்த மாரி நாயகம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி நிஷா பானு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அனைத்து தரப்பு மக்களின் ஆலோசனை பெற்று கூட்டம் நடத்தாமல் தன்னிச்சையாக கூட்டம் நடத்தி உத்தரவு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தாசில்தார் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பித்தார்.