darbar
  • January
    17
    Friday

Main Area

Main



பிரபல சினிமா இயக்குநர் ராபர்ட் சென்னையில் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

robert
robert

சென்னை: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குநர் ராபர்ட் சிகிச்சை பலனின்றி, இன்று காலை உயிரிழந்துள்ளார்.

1980-களில் பல வெற்றி படங்களை இயக்கியவர்கள் இரட்டை இயக்குனர்களான ராபர்ட் ராஜசேகர். ‘பாலைவனச் சோலை’, ‘மனசுக்குள் மத்தாப்பு’ ஆகிய திரைப்படங்கள் இவர்கள் படைப்பில் உருவானவை தான். ‘ஒரு தலை ராகம்‘ படத்தை இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். 

paalaivana cholai

அதன்பின் தனித் தனியாக பிரிந்த இருவரும், பெரிதாக வெற்றி படங்களை கொடுக்கவில்லை. ராஜசேகர் தற்போது டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

இன்னொருவரான ராபர்ட் கொளத்தூரில் வசித்து வந்தார். 68 வயதாகும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, பொத்தேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 10 மணிக்கு காலமானார். அவர் உடலுக்கு திரியுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
 

2018 TopTamilNews. All rights reserved.