கொல்கத்தா அதிரடி வெற்றி – வீழ்ந்தது டெல்லி

 

கொல்கத்தா அதிரடி வெற்றி – வீழ்ந்தது டெல்லி

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள். முதல் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியோடு மோதுகிறது.

டாஸ் வென்ற டெல்லி கேப்டன் முதல் பீல்டிங்கைத் தேர்வு செய்தார். கொல்கத்தா டீமிம் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக கில்லும், ரானாவும் வந்தனர்.

கொல்கத்தா அதிரடி வெற்றி – வீழ்ந்தது டெல்லி

கில் 9, திரிப்பாதி 13, தினேஷ் கார்த்திக் 3 என வரிசையாக ஒரு பக்கம் அவுட்டானாலும், ரானா நிலைத்து ஆடினார். அவரோடு ஜோடி சேர்ந்த சுனில் நரேன் 32 பந்துகலில் 64 ரன்கள் விளாசினார்.  அடுத்து வந்த மோர்கனும் அடித்து ஆடினார்.ரானா 53 பந்துகளில் 83 ரன்கள் குவித்தார்.

19.4 ஓவரில் 194 ரன்கள் இருக்க, அணி ஸ்கோர் 200 யைத் தொடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அடுத்த இரண்டு பந்துகளில் ரானா, மோர்கன் என வரிசையாக விக்கெட்டுகள் விழுந்தனர். எனவே, கொல்கத்தாவின் ஸ்கோர் 194. டெல்லிக்கு வெற்றி இலக்கு 195.

கொல்கத்தா அதிரடி வெற்றி – வீழ்ந்தது டெல்லி

195 எனும் கடினமான ஸ்கோரை எதிர்கொள்ள ரஹானேவும் தவானும் ஓப்பனிங் இறங்கினார்கள். ரஹானே முதல் பந்திலேயே விக்கெட்டை பறிக்கொடுத்தார். தவான் 6 ரன்களோடு அவுட்டானார். ஸ்ரேயாஸ் (47) பண்ட் (27) என நிதானித்து ஆடி ஆட்டமிழந்தார்கள்.

கொல்கத்தா அதிரடி வெற்றி – வீழ்ந்தது டெல்லி

ஹெட்மெயர் 10, மார்கஸ் ஸ்ரொயினிஸ் 6, அக்ஸர் பட்டேல் 9, என வரிசையாக விக்கெட் வீழ்ந்துகொண்டே இருந்ததால் 135 ரனகளுக்குள் டெல்லி சுருண்டது.

கொல்கத்தா அதிரடி வெற்றி – வீழ்ந்தது டெல்லி

கொல்கத்தா பவுலர் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகளைப் பறித்து வெற்றியை உறுதி செய்தார். அவர் வீசிய 4 ஓவர்களில் 20 ரன்களே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.