கொல்கத்தா Vs கேரளா – ISL கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்

 

கொல்கத்தா Vs கேரளா –  ISL கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடந்தபோது தினமும் மாலை தொடங்கி விறுவிறுப்பாக பொழுதைக் கழித்தீர்களா… அதை விடவும் உற்சாகப்படுத்த இன்று ஆரம்பமாகிறது  ISL கால்பந்து போட்டிகள்.

கடந்த ஆறு வருடங்களாக ISL கால்பந்து திருவிழா நடைபெற்று வருகிறது. மொத்தம் பத்து அணிகள். ஒவ்வோர் அணியும் மற்ற அணியோடு இரு முறை மோத வேண்டும். இறுதியில் புள்ளிகளின் அடிப்படையில் முதல் நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தேர்வாகும். (ஐபிஎல் போல பிளே ஆஃப் சுற்று ISL  கிடையாது)

கொல்கத்தா Vs கேரளா –  ISL கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்

ISL கால்பந்து தொடர் தொடங்கிய 2014 ஆம் ஆண்டில் கொல்கத்தாவும், 2015 ஆம் ஆண்டில் சென்னையும், 2016 ஆம் ஆண்டில் மீண்டும் கொல்கத்தாவும், 2017 ஆம் ஆண்டில் மீண்டும் சென்னையும், 2018 ஆம் ஆண்டில் பெங்களூரூவும் 2019 ஆம் ஆண்டில் மூன்றாம் முறையாக கொல்கத்தாவும் கோப்பையை வென்றிருக்கின்றன.

ஐபிஎல் போட்டியில் மும்பை எப்படி கெத்து காட்டுகிறதோ…. ISL போட்டியில் கொல்கத்தா கில்லியாக இருக்கிறது. இன்றைய முதல் போட்டியும் கொல்கத்தா அணி விளையாடும் ஆட்டம்தான். மோதுவது கேரளா அனி.

கொல்கத்தா Vs கேரளா –  ISL கால்பந்து திருவிழா இன்று ஆரம்பம்

நவம்பரில் தொடங்கும் ISL தொடர் மார்ச் மாதம் வரை தொடர்ந்து 115  போட்டிகள் நடக்கவிருக்கிறது. அனைத்துப் போட்டிகளும் பாதுகாப்பு காரணங்களாக பார்வையாளர் இன்றி மூடப்பட்ட மைதானத்தில் நடக்கவுள்ளது. அதுவும் கோவாவில் உள்ள ஒரே மைதானத்தில்தான் அனைத்துப் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் போட்டியில் கொல்கத்தா வென்று தான் சாம்பியன் என கெத்து காட்டுமா… இல்லை கேரளா வென்று சாம்பியனுக்கே கொட்டு வைக்குமா என்பதை இன்றிரவு ஆட்டத்தில் பார்ப்போம்.