கொல்கத்தா த்ரில் வெற்றி! கே.எல்.ராகுல் – மயங் அகர்வால் பார்டனர்ஷிப் வீண்

கொல்கத்தா த்ரில் வெற்றி!  கே.எல்.ராகுல் – மயங் அகர்வால் பார்டனர்ஷிப் வீண்

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள். முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியோடு மோதியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் ஆட முடிவெடுத்தார்.

கொல்கத்தா த்ரில் வெற்றி!  கே.எல்.ராகுல் – மயங் அகர்வால் பார்டனர்ஷிப் வீண்

ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ராகுல் திரிபாதியும் கில்லும் இறங்கினர். சென்ற போட்டியில் அதிரடி காட்டிய திரிபாதி 4 ரன்களிலும் ரானா 2 ரன்களில் அவுட்டாகினர். இயன் மோர்கல் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 24 ரன்கள் எடுத்த நிலையில் பிஷ்னொய் பந்தில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

கொல்கத்தா த்ரில் வெற்றி!  கே.எல்.ராகுல் – மயங் அகர்வால் பார்டனர்ஷிப் வீண்

தினேஷ் கார்த்திக் இறங்கினார். 47 பந்துகளில் 57 ரன்கள் குவித்த கில் ரன் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 145. அடுத்து இறங்கினார் ரஸல். கடைசி ஓவரை கிறிஸ் ஜோர்டன் வீசினார். ரன்கள் கிடைக்க அணியின் ஸ்கோர் 163 ஆக முடிவானது.

கொல்கத்தா த்ரில் வெற்றி!  கே.எல்.ராகுல் – மயங் அகர்வால் பார்டனர்ஷிப் வீண்

முகம்மது ஷமி, அர்ஷ்தீப் சிங், பிஷ்னொய் மூவரும் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கொல்கத்தா த்ரில் வெற்றி!  கே.எல்.ராகுல் – மயங் அகர்வால் பார்டனர்ஷிப் வீண்

164 எடுத்தால் பஞ்சாப் அணி வெற்றியடையலாம் என்ற வெற்றி இலக்கோடு ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக கே.எல்.ராகுலும் மயங் அகர்வாலும் இறங்கினர். அபாரமான பார்டனர்ஷிப்பால் இருவரும் அரை சதம் அடித்தனர். 12 வது ஓவரில் இவர்களின் பார்டனர்ஷிப் 100 ரன்களைக் கடந்தது.

கொல்கத்தா த்ரில் வெற்றி!  கே.எல்.ராகுல் – மயங் அகர்வால் பார்டனர்ஷிப் வீண்

மயங் அகர்வால் 39 பந்துகளில் 1 சிக்ஸர், 6 பவுண்ட்ரிகளோடு 56 ரன்கள் எடுத்த நிலையில் கிருஷ்ணா வீசிய பந்தை கில்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். வாட்ஸன் – டூபிளஸி ஜோடி போல விக்கெட் விழாமலே வெல்வார்கள் என நினைத்தது நடக்கவில்லை.

ராகுலோடு ஜோடி சேர்ந்தார் நிக்கோலஸ் பூரண். இந்த ஜோடி பவுண்ட்ரிகளும் சிக்ஸர்களுமாக கொல்கத்தா பவுலிங்கை பிரித்து மேய்ந்தது. நாகர் கோட்டி வீசிய 16 வது ஓவரில் 19 ரன்கள் எடுத்தனர்.

கொல்கத்தா த்ரில் வெற்றி!  கே.எல்.ராகுல் – மயங் அகர்வால் பார்டனர்ஷிப் வீண்

10 பந்துகளில் 16 ரன்கள் எடுத்த நிக்கோலஸ் பூரன், சுனில் நரேன் வீசிய பந்தில் கிளீன் போல்டாகி விக்கெட்டைப் பறிகொடுத்தார். இதனால், பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பில் பின்னடைவு ஏற்பட்டது.

அடுத்து இறங்கிய பிரபசிம்ரன் சிங்கும் 4 ரன்களோடு அவுட்டாகி விட்டார். பிரசாத் கிருஷ்ணா வீசிய பந்தில் ரானாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். கிருஷ்ணா ஓவரிலேயே தனது விக்கெட்டையும் பறிகொடுத்தார் கே.எல். ராகுல். அப்போது அவர் 74 ரன்கள் எடுத்திருந்தார்.

கொல்கத்தா த்ரில் வெற்றி!  கே.எல்.ராகுல் – மயங் அகர்வால் பார்டனர்ஷிப் வீண்

மேக்ஸ்வேல் பேட்டிங் செய்ய வந்தார். கடைசி ஓவரில் இரண்டு பந்துகளுக்கு 7 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் மன்தீப் சிங் விக்கெட் விழுந்தது. கடைசி பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார் மேக்ஸ்வெல். அதனால் எந்தப் பயனும் இல்லை.

2 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா த்ரில் வெற்றி பெற்றது. பஞ்சாப் வெல்லும் நினைத்த நிலையில் சுனில் நரேன், கிருஷ்ணா ஆகிய இரு பவுலர்களும் ஆட்டத்தின் முடிவையே மாற்றி விட்டனர்.