164 ரன்கள் அடித்தது கொல்கத்தா! தினேஷ் கார்த்திக் – கில் அரை சதம்!

164 ரன்கள் அடித்தது கொல்கத்தா! தினேஷ் கார்த்திக் – கில் அரை சதம்!

சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள். முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியோடு மோதுகிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

164 ரன்கள் அடித்தது கொல்கத்தா! தினேஷ் கார்த்திக் – கில் அரை சதம்!

ஐந்து போட்டிகளில் ஆடி, மூன்றில் வென்று பாயிண்ட் டேபிளில் 4 வது இடத்தில் உள்ளது கொல்கத்தா. ஆறு போட்டிகளில் ஆடி ஒன்றில் மட்டுமே வென்று கடைசி இடமான 8-ம் இடத்தில் உள்ளது பஞ்சாப்.

டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் முதலில் பேட்டிங் ஆட முடிவெடுத்தார்.

164 ரன்கள் அடித்தது கொல்கத்தா! தினேஷ் கார்த்திக் – கில் அரை சதம்!

கொல்கத்தாவுக்கு தொடக்கவே அதிர்ச்சி காத்திருந்தது. சென்ற போட்டியில் அதிரடி காட்டிய திரிபாதி 4 ரன்களிலும் ரானா 2 ரன்களில் அவுட்டாகினர். இயன் மோர்கல் சிறிது நேரம் தாக்குப்பிடித்து 24 ரன்கள் எடுத்த நிலையில் பிஷ்னொய் பந்தில் மேக்ஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். தினேஷ் கார்த்திக் இறங்கினார்.

164 ரன்கள் அடித்தது கொல்கத்தா! தினேஷ் கார்த்திக் – கில் அரை சதம்!

47 பந்துகளில் 57 ரன்கள் குவித்த கில் ரன் அவுட்டானார். அப்போது அணியின் ஸ்கோர் 145. அடுத்து இறங்கிய ரஸல் வந்த வேகத்தில் அவுட்டானார். அவர் எடுத்தது 5 ரன்கள் மட்டுமே.

கடைசி ஓவரை கிறிஸ் ஜோர்டன் வீசினார். 9ரன்கள் கிடைக்க அணியின் ஸ்கோர் 164 ஆக முடிவானது. கடைசி பந்தில் இரண்டு ரன்கள் ஓட முயற்சி செய்யும்போது தினேஷ் கார்த்திக் ரன் அவுட்டானார்.

164 ரன்கள் அடித்தது கொல்கத்தா! தினேஷ் கார்த்திக் – கில் அரை சதம்!

165 எடுத்தால் கிங்ஸ் லெவ்ன் பஞ்சாப் அணி வெற்றியடையலாம்.