மூச்சு திணறலால் இறந்த வாலிபர் -டெஸ்ட் பண்ணாமலே கொரானா என அடக்கம் செய்த டாக்டர் -கோர்ட்டுக்கு போன பெற்றோர் ..

 

மூச்சு திணறலால் இறந்த வாலிபர் -டெஸ்ட் பண்ணாமலே கொரானா என அடக்கம் செய்த டாக்டர் -கோர்ட்டுக்கு போன பெற்றோர் ..

ஒரு அரசு மருத்துவமனையில் மூச்சு திணறலால் இறந்த சிறுவனை கொரானா டெஸ்ட் பண்ணாமலே கொரானாவால் இறந்து விட்டதாக அடக்கம் செய்த அவலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது

மூச்சு திணறலால் இறந்த வாலிபர் -டெஸ்ட் பண்ணாமலே கொரானா என அடக்கம் செய்த டாக்டர் -கோர்ட்டுக்கு போன பெற்றோர் ..மேற்கு வங்க மாநிலம் ,கொல்கத்தா அருகே பரகனாஸ் மாவட்டத்தில் இச்சாபூரில் வசிக்கும்18 வயது சுப்ராஜித் சாட்டர்ஜிக்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது .இதனால் அவரின் பெற்றோர் அந்த வாலிபரை அழைத்துக்கொண்டு சிகிச்சையளிக்க பல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்க இடம் கேட்டார்கள் .ஆனால் இரண்டுக்கும் மேற்பட்ட தனியார் ஆஸ்பத்திரிகள் அவரை அனுமதிக்க மறுத்துள்ளன .இதனால் அந்த சிறுவனை மூச்சு திணறலோடு 12 மணி நேரமாக கொல்கத்தா வீதிகளில் தூக்கிக் கொண்டு சிகிச்சையளிக்க முடியாமல் அலைந்துள்ளார்கள் .

மூச்சு திணறலால் இறந்த வாலிபர் -டெஸ்ட் பண்ணாமலே கொரானா என அடக்கம் செய்த டாக்டர் -கோர்ட்டுக்கு போன பெற்றோர் ..இறுதியில் அவருக்கு உயிர் போகும் தருவாயில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி அளித்தார்கள் .ஆனால் அங்கு அனுமதிக்கப்பட்ட அடுத்த ஐந்தாவது நிமிடமே அந்த சிறுவனின் உயிர் பிரிந்து விட்டது .உடனே அங்கிருந்த ஒரு டாக்டர் எந்த டெஸ்டும் பண்ணாமலே ,இந்த சிறுவன் கொரானாவால் இறந்து விட்டான் என்று தாமாகவே முடிவெடுத்துள்ளார் .அது மட்டுமல்ல அந்த இறந்த சிறுவனை கொரானா நோயாளிகளை அடக்கம் செய்வது போல் அடக்கம் செய்வதற்கான நடைமுறைகளையும் மேற்கொண்டார் .
அவரின் பெற்றோரை அந்த சிறுவனின் சடலத்திற்கு அருகே கூட அனுமதிக்காமல் அடக்கம் செய்து விட்டனர் .

இந்நிலையில் அந்த சிறுவனின் பெற்றோர்கள் கொல்கத்தா கோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்துள்ளார்கள் .அதில் இறந்த எங்கள் மகனை கொரானாவால் இறந்ததாக டாக்டர்கள் டெஸ்ட் பண்ணாமல் அடக்கம் செய்துள்ளார்கள் .அதனால் அவரின் உடலை மீண்டும் போஸ்ட்மார்ட்டம் செய்து அவர் உண்மையில் கொரானாவால் இறந்தாரா என்று கண்டறிய கோர்ட் நடவடிக்கை எடுக்க கோரினார்கள் .
வழக்கை விசாரித்த கோர்ட் ,நான்கு வாரங்களுக்குள் இறந்தவரை பிரேத பரிசோதனை செய்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.