கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம்!

 

கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம்!

தமிழகம், கேரளா, அசாம், மேற்கு வங்கம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது.தமிழகம் முழுவதும் 75 மையங்களில் 14 மேஜைகள் போடப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வந்த வேட்பாளர்கள், முகவர்களுக்கு கொரானா இல்லை என்ற சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது. சுமார் 5.64 லட்சம் வாக்குகள் தபால் வாக்குகளாக பதிவாகியுள்ளது. இந்த முறை தபால் வாக்குகளில் 80வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் வாக்களித்துள்ளனர்.

கொளத்தூர் தொகுதி தேர்தல் அலுவலர் திடீர் மாற்றம்!

இந்நிலையில் கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் கடைசி நேரத்தில் கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலராக கண்ணன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.கொளத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் ஆதிராஜாராம், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ஜமால் , திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மு.க .ஸ்டாலின், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஆறுமுகம் என சுமார் 37 பேர் களத்தில் உள்ளனர்.