இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் யார்? யார்?

 

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் யார்? யார்?

இங்கிலாந்துடனான டெஸ்ட் போட்டிக்காக விராட் கோலி, இஷாந்த் சர்மா, ஹர்திக் பாண்டியா ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பார்டர்-கவாஸ்கர் தொடர் தற்போது நடந்துமுடிந்துள்ளது. இதையடுத்து இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி ஒருநாள், டெஸ்ட், டி20 என மூன்று தொடர்களில் விளையாடவிருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் டாப் 2 இடங்களை உறுதிசெய்வதில் இந்தத் தொடர் மிக முக்கிய காரணியாக இருக்கிறது. இதன் முடிவுகளை ஆஸ்திரேலியாவும் எதிர்நோக்கும்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் யார்? யார்?

சுற்றுப்பயணத்தில் இங்கிலாந்து அணி முதலாவதாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. பிப்ரவரி 5ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்தப் போட்டிக்கான இந்திய அணி வீரர்களின் விவரங்கள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இச்சூழலில் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சேதன் சர்மா தலைமையிலான தேர்வுக் குழு இன்று கூடியது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் யார்? யார்?

இந்தக் கூட்டத்தில் யார் யாரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதன்படி, ஆஸ்திரேலியா தொடரில் காயம் காரணமாக விலகிய இஷாந்த் சர்மா, மீண்டும் இந்திய அணிக்கு திரும்புகிறார். அதேபோல குழந்தை பிறப்பிற்காக டிசம்பரில் இந்தியா திரும்பிய விராட் கோலியும் அணியில் இடம்பெறுவார் என தெரிகிறது.

சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவின் தந்தை மறைவு கிரிக்கெட் உலகில் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இருப்பினும், அவர் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பங்கேற்பார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மொத்தம் 18 வீரர்கள் அடங்கிய அணி அறிவிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்: மீண்டும் அணிக்கு திரும்பும் இந்திய வீரர்கள் யார்? யார்?

உத்தேச அணிக் குழு விவரம்:

தொடக்க ஆட்டக்காரர்கள்: ரோஹித் சர்மா, சுப்மன் கில், மயங்க் அகர்வால்

நடுவரிசை ஆட்டக்காரர்கள்: புஜாரா, கோலி (கேப்டன்), ரஹானே, ரிஷப் பண்ட், சஹா, பாண்டியா, கேஎல் ராகுல்

வேகப்பந்துவீச்சாளர்கள்: பும்ரா, இஷாந்த் சர்மா, சிராஜ், ஷர்துல் தாக்கூர்

சுழற்பந்துவீச்சாளர்கள்: அஸ்வின், வாசிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அக்சர் படேல்

ஸ்டேண்ட்பை (Standbyes): கேஎஸ் பரத் (கீப்பர்), அபிமன்யா ஈஸ்வரன், சபாஷ் நதீம், ராகுல் சஹர்

வலைப் பந்துவீச்சாளர்கள் (Net Bowlers): அங்கித் ராஜ்புத், ஆவேஷ் கான், சந்தீப் வாரியர், கிருஷ்ணப்பா கௌதம், சவுரப் குமார்