கொடிவேரி அணையில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை!

 

கொடிவேரி அணையில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை!


ஈரோடு


கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி அணையில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை 102 அடியை எட்டியதை, அணைக்கு வரும் நீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணைக்கு விநாடிக்கு 6,000 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு கருதி, அந்த நீர் முழுமையாக பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், கோபிச்செட்டிப்பாளையம் அருகே பவானி ஆற்றில் அமைந்துள்ள கொடிவேரி அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கொடிவேரி அணையில் திடீர் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகளுக்கு தடை!

அணையில் உள்ள தடுப்புக் கம்பிகளை தாண்டி வெள்ளநீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. இதனால் கொடிவேரி அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அணையில் பரிசல் இயக்கவும் தடை விதித்துள்ள நிலையில், அணைக்கு சுற்றுலா பயணிகள் செல்லாத வகையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லவும், பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ ஆற்றுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.