கொடநாடு வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

 

கொடநாடு வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி சாட்சிகளில் ஒருவரான ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

கொடநாடு வழக்கின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள கோவையைச் சேர்ந்த ரவி தாக்கல் செய்த மனுவில், கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கனகராஜ் என்பவரை தனக்கு தெரியும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் மேல் விசாரணை நடத்த உள்ளதால், தங்கள் விருப்பப்படி வாக்குமூலம் அளிக்கும்படி, பல தரப்பில் இருந்தும் தனக்கு மிரட்டல்கள் வருவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசுத்தரப்பில் 41 சாட்சிகள் விசாரிக்கப்பட்டு முடித்த நிலையில், இதுவரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு சாட்சிகள் விசாரணை இன்னும் துவங்கவில்லை எனக் கூறியுள்ள அவர், நீதிமன்ற அனுமதியின்றி மேல் விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்த வழக்கை விரைந்து முடிக்கும்படி விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிடுவதுடன், மேல் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.