• February
    26
    Wednesday

Main Area

Main



பேர்தான் ‘ருக்கு ஆயா கடை’... சூப்பர்ஸ்டார் காம்போ, அஜித் காம்போனு அசத்தும் ஆயா கடை!

rukku aya kadai
rukku aya kadai

சென்னை கோடம்பாக்கம், விசுவநாதபுரத்தில் இருக்கிறது இந்த ‘ருக்கு ஆயா கடை.’ அல்லது,கோடம் பாக்கம் ரயில்வே ஸ்டேசனில் இருந்து,  இடதுபுறம் திரும்பி ரஜினிகாந்தின் ராகவேந்திரா கல்யாணமண்டபம் தாண்டினால் 200 மீட்டர்தான் இந்தக் கடை!

ruku-aya-kadai

ஜூனியர் குப்பண்ணா கடைகளைத் துவக்கிய குப்பண்ணாவின் மனைவிதான் இந்த ருக்கு ஆயாவாம். அதே குடும்பத்தின் வாரிசுகள் இந்த ஹோட்டலை துவங்கி இருக்கிறார்கள். குப்பண்ணாவோடு ஒப்பிட்டால் விலை குறைவுதான். நல்ல சுத்தமான, வெளிச்சமான உணவகம். வெஜ், நான் வெஜ் இரண்டுமே உண்டு. 

காலையிலேயே துவங்கி விடுகிறார்கள். காலை 7 மணிக்கு இட்லி, வடை, பொங்கல்,பூரி,தோசை ஒருபுறமென்றால்,இட்லி குடல்கறி,சிக்கன் ,மட்டன் இன்னொரு புறம் தயாராக காத்திருக்கிறது. மதியம் சாப்பாடு பிரியாணி வெரைட்டிகள்.அதில்தான் சூப்பர்ஸ்டார் காம்போ,கமல் காம்போ,விஜய் காம்போ,அஜித் காம்போ,சூரியா காம்போ,விஜய சேதுபதி காம்போ என விதவிதமாக அடுக்குகிறார்கள்.

எல்லாமே அசைவ காம்போக்கள்,ஆனால் அஜித்தை மட்டும் சுத்த சைவமாக்கி விட்டார்கள்.மாஸ்டர் செஃப் யாரும் கிடையாது.ருக்கு ஆயாதான் ஒரே செஃப். அவர் கைப்பக்குவத்தில் அரைத்த மசாலாக்கள் பேக் செய்து வைத்திருக்கிறார்கள். மீன்,மட்டன்,கோழி ஏன் ரசப்பொடிவரை  அவர் கைப்பக்குவம்தான்.சமைப்பவர்கள் அடிப்பிடிக்காமல் ,இந்த மசாலாக்களைப் போட்டு வேகவைத்துக் கொடுத்தால் போதும்.

gilma-briyani

பிரியாணி 120 ரூபாய்,மீன் சாப்பாடு 150 ரூபாய்,நான் வெஜ் சாப்பாடு 90 ரூபாய்.இவை தவிர வஞ்சிரம் தவாப் ஃபிரை,சிக்கன் பள்ளிப்பாளையம் போன்ற வழக்கமான பண்டங்களும் கிடைக்கின்றன. அவைதவிர இங்கே இரண்டு புதிய ஐட்டங்கள் உண்டு.ஒன்று எக் வடியல்! கொதிக்கும் கோழிக்க் குழம்புக்குள் முட்டையை உடைத்து ஊற்றிக் கொடுத்ததது போல இருக்கிறது, ஆனால் புதுச்சுவை.

அடுத்தது விஜய காம்போவில் வரும் 'கில்மா' பிரியாணி.பிரியாணி,முட்டைப் பொரியல்,பொடியாக வெட்டிய சிக்கன் 65 எல்லாம் கலந்தது போன்ற சுவை.இத்துடன் ஒரு குழம்பு தருகிறார்கள். அதை ஊற்றிப் பிசைந்தால்,அது முற்றிலும் புதிய சுவை.மாலை மீண்டும்,இட்லி,தோசை வகைகள் சப்பாத்தி வகைகள்.கூடவே வெஜ்,நான்வெஜ் தொடுகறிகள்! ஒரு தடவை ஆயா கடைக்கு போய் பாருங்கள்.

2018 TopTamilNews. All rights reserved.