கொடைக்கானல் கோக்கர்ஸ் பூங்கா நாளை முதல் திறப்பு!

 

கொடைக்கானல் கோக்கர்ஸ் பூங்கா நாளை முதல் திறப்பு!

கொடைக்கானலில் இருக்கும் கோக்கர்ஸ் பூங்கா நாளை முதல் திறக்கப்படும் என உதவி ஆட்சியர் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கோவில்கள், பள்ளி கல்லூரிகள், மால், தியேட்டர் என அனைத்தும் மூடப்பட்டன. இதனையடுத்து கடந்த 1ம் தேதி, மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மூடப்பட்ட சேவைகள் அனைத்தும் இயங்க அரசு அனுமதி அளித்தது. ஆனால், தியேட்டர்கள் மற்றும் சுற்றுலா தலங்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் கொடைக்கானலுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மக்கள் சுற்றுலாவுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என அம்மாவட்ட ஆட்சியர் அண்மையில் அறிவித்தார்.

கொடைக்கானல் கோக்கர்ஸ் பூங்கா நாளை முதல் திறப்பு!

மேலும், அரசு பேருந்துகளில் சுற்றுலா வருபவர்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என்றும் கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களில் வருபவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார். அதன் படி, கொடைக்கானலில் திறக்கப்பட்டிருக்கும் சில இடங்களுக்கு உரிய பாஸ் பெற்று மக்கள் சுற்றுலா செல்கின்றனர்.

இந்த நிலையில், கொடைக்கானல் கோக்கர்ஸ் பள்ளத்தாக்கு சுற்றுலா தலம் நாளை முதல் மீண்டும் திறக்கப்படும் என உதவி ஆட்சியர் சிவகுரு அறிவித்துள்ளார். முன்னதாக, பிரயண்ட் பூங்கா, வெள்ளிஅருவி உள்ளிட்ட இடங்கள் திறக்கப்பட்டன என்பது நினைவு கூரத்தக்கது.