கொடைக்கானலில் சைக்கிள் சவாரிக்கு இன்று முதல் அனுமதி!

கொடைக்கானலில் சைக்கிள் சவாரிக்கு இன்று முதல் அனுமதி!

கொடைக்கானலில் 7 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்ட சைக்கிள் சவாரிக்கு இன்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 7 மாத காலமாக கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டது. தளர்வுகளுடன் கூடிய ஊரடங்களால் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு இபாஸ் எடுத்துக்கொண்டு சுற்றுலா பயணிகள் வர தமிழக அரசு அனுமதியளித்தது.

கொடைக்கானலில் சைக்கிள் சவாரிக்கு இன்று முதல் அனுமதி!

முதற்கட்டமாக சுற்றுலா பயணிகள் பூங்காவில் மட்டும் பார்வையிட மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. அதன்படி கோக்கர்ஸ் சுற்றுலா தளத்திலும் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டது.

கொடைக்கானலில் சைக்கிள் சவாரிக்கு இன்று முதல் அனுமதி!

இந்நிலையில் கொடைக்கானலில் இன்று முதல் சைக்கிளில் சவாரி செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. சைக்கிள்களில் கிருமி நாசினி தெளித்து முறையான விதிமுறைகளை பின்பற்றி பயணிகள் சவாரி செய்யலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து வாடகை சைக்கிளில் சுற்றுலாப்பயணிகள் ஜாலியாக ஆர்வத்துடன் ஏரி சாலையில் வலம்வந்தது குறிப்பிடத்தக்கது.