”சக ஊழியர் மனநிலை அறியலாம்” – ”கேண்டீன் உணவு சுவையை அதிகரிக்கலாம்?” ”2030க்குள் எதிர்பார்க்கப்படும் டெக் மாற்றங்கள் ” !

”சக ஊழியர் மனநிலை அறியலாம்” – ”கேண்டீன் உணவு சுவையை அதிகரிக்கலாம்?” ”2030க்குள் எதிர்பார்க்கப்படும் டெக் மாற்றங்கள் ” !

2030ம் ஆண்டுக்குள் அலுவலகத்தில் உள்ள சக ஊழியரின் மனநிலை குறித்து அறிந்துகொள்ளும் தொழில்நுட்பத்தை மக்கள் எதிர்பார்ப்பது எரிக்சன் நிறுவனம் மேற்கொண்ட புதுமையான ஆய்வில் தெரியவந்துள்ளது.

”சக ஊழியர் மனநிலை அறியலாம்” – ”கேண்டீன் உணவு சுவையை அதிகரிக்கலாம்?” ”2030க்குள் எதிர்பார்க்கப்படும் டெக் மாற்றங்கள் ” !

செயற்கை நுண்ணறிவு 5ஜி, வர்சுவல் ரியாலிட்டி உள்ளிட்ட தொழில்நுட்பங்களை பயன்படுத்தி, எத்தகைய புலன்கள் சார்ந்த தொழில்நுட்பங்களை கொண்டு வர முடியும் என்றும் அதன் மூலமாக ஒயிட் காலர் பணிகளின் அலுவல் சூழலியலில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பது குறித்த புதுமையான ஆய்வை எரிக்சன் இண்டஸ்ட்ரீஸ் லேப் நிறுவனம் மேற்கொண்டது.

”சக ஊழியர் மனநிலை அறியலாம்” – ”கேண்டீன் உணவு சுவையை அதிகரிக்கலாம்?” ”2030க்குள் எதிர்பார்க்கப்படும் டெக் மாற்றங்கள் ” !

உலகம் முழுவதும் இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளில் 13.3 கோடி ஊழியர்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.. இந்த ஆய்வின் முடிவில் சில ஆச்சரியமான விஷயங்களையும்,, வித்தியாசமான மாற்றங்களையும் மக்கள் எதிர்பார்ப்பது தெரியவந்துள்ளது. அவற்றை விரிவாக இனி பார்ப்போம்..

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 60 சதவீதம் பேர், 2030ம் ஆண்டுக்குள் சக ஊழியரின் மனநிலையை அறியும் தொழில்நுட்பம் வந்து விடும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளனர்.

”சக ஊழியர் மனநிலை அறியலாம்” – ”கேண்டீன் உணவு சுவையை அதிகரிக்கலாம்?” ”2030க்குள் எதிர்பார்க்கப்படும் டெக் மாற்றங்கள் ” !

அது மட்டுமின்றி, அலுவலக கேண்டீன் உணவின் சுவை மற்றும் மணத்தை டிஜிட்டல் முறையில் அதிகப்படுத்தும் தொழில்நுட்பம் வந்துவிடும் என்று 73 சதவீத முதுநிலை மேலாளர்கள் எதிர்பார்ப்பதும் தெரியவந்துள்ளது.

அதேப்போல அடுத்து வெளியே மழை வரப்போகிறது என்பதை உணர்த்தும் வகையில் ஆன்லைன் வெதர் ரிப்போர்ட் கூறும் டிஜிட்டல் சாதனங்கள் வந்துவிடும் என்றும் பலர் எதிர்பார்த்திருப்பதும், பங்கேற்றவர்களில் பத்தில் 6 பேர், ஆன்லைன் மீட்டிங் தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.

”சக ஊழியர் மனநிலை அறியலாம்” – ”கேண்டீன் உணவு சுவையை அதிகரிக்கலாம்?” ”2030க்குள் எதிர்பார்க்கப்படும் டெக் மாற்றங்கள் ” !

மேலும், 2030ம் ஆண்டுக்குள் உணர்வுகள் அடிப்படையிலான தொழில்நுட்பத்தை மையமாக கொண்ட இணைய வழியை பயன்படுத்தி, விளம்பரம் மற்றும் விற்பனை நடைபெறும் என 59 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். 2030ம் ஆண்டுக்குள் டிஜிட்டல் முறையில் உணவின் சுவையை உணரும் தொழில்நுட்பம் வந்துவிடும் என பத்தில் ஆறு பேர் நம்புவதும் இந்த புதுமையான ஆய்வில் தெரியவந்துள்ளது. அதாவது சமைக்கிறவர் கையில இருக்குற ஸ்மார்ட் வாட்சுல டீல ஒரு சொட்டு விட்டா, நம்ம ஸ்மார்ட் வாட்சுல அலாரம் அடிச்ச உடனே அதை சுவைத்துபார்த்து டீ சுவை அறியும் அளவுக்கு தொழில்நுட்பத்தில் மாற்றம் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை !

  • எஸ். முத்துக்குமார்