நீட் தேர்வுக்கு என்ன வழி? ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.ராஜன் பேட்டி

 

நீட் தேர்வுக்கு என்ன வழி? ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.ராஜன் பேட்டி

நீட் தேர்வால் பாதிப்பு தான் அதில் மாற்றுக்கருத்தில்லை என நீட் குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.ராஜன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்கு என்ன வழி? ஓய்வுபெற்ற நீதிபதி கே.என்.ராஜன் பேட்டி

நீட் தேர்வு சமூகத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்பட்டுத்தியுள்ளதா என ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது. சமூக சமத்துவத்துகான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் ரவீந்திரநாத், கல்வியாளர் ஜவஹர் நேசன், சுகாதாரத்துறை செயலர், சட்டத்துறை செயலர், பள்ளிக்கல்வித்துறை செயலர், மருத்துவக் கல்வி இயக்குனர், மருத்துவக் கல்வி கூடுதல் இயக்குனர் ஆகியோர் இக்குழுவில் உள்ளனர். இக்குழுவின் முதல் கூட்டம் மருத்துவக் கல்வி இயக்குநரகத்தில் இன்று நடைபெற்றது.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர்மட்டக் குழு தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதி
கே.என்.ராஜன், “நீட் தேர்வால் பாதிப்பு இருக்கிறது என்று வெறும் வாயால் மட்டும் சொல்லிவிட முடியாது. எனவே அதற்கான ஆதாரங்களை திரட்ட வேண்டும். அரசு பள்ளி மாணவர்கள், அரசு உதவி பெறும் மாணவர்கள், சிபிஎஸ்சி மாணவர்கள் என்று அனைத்து தரப்பு மாணவர்களின் பாதிப்புகள் குறித்து ஆதாரங்கள் திரட்டப்படும். தொடர்ந்து உயர்மட்ட குழு கூட்டம் நடைபெறும். பின்னர் இறுதியாக தமிழக முதலமைச்சருடன் இதுகுறித்த ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படும். பாதிப்புக்கு உள்ளான மாணவர்களிடம் கருத்து கேட்கும் திட்டம் ஏதுமில்லை

நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்கு எத்தனை வருடத்திற்கான தகவல்கள் வேண்டும் என்பது குறித்தான விவரங்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் நாங்கள் கொடுக்கக் கூடிய ஆதாரங்கள் மக்கள் ஏற்கும் வகையில் இருக்க வேண்டும். எனவே அதனை முன்னெடுத்து தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும்” எனக் கூறினார்.