நீயா…, நானா? – திண்டுக்கல் Vs திருச்சி

 

நீயா…, நானா? – திண்டுக்கல் Vs திருச்சி

உட்கட்சிப் பூசல்களால் உருக்குலைந்துவரும் திமுகவில் முதன்மைச் செயலாளர் கே.என் நேருவுக்கும், துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கும் இடையேயான ஈகோ யுத்தம்தான் இப்போது அந்தக் கட்சியின் ’ஹாட்- டாப்பிக்’காக வலம் வருகிறது.
ஐ.பெரியசாமியோடு சேர்த்து சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி துரைசாமி என ஏற்கனவே 3 துணைப் பொதுச் செயலாளர்கள் இருந்தனர். வி,பி துரைசாமி வெளியேறியதைத் தொடர்ந்து அந்தியூர் செல்வராஜ் அந்த பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். எத்தனை பேர் அந்தப் பொறுப்பில் இருந்தாலும்

நீயா…, நானா? – திண்டுக்கல் Vs திருச்சி

பெரியசாமிதான் தலைமைக்கு நெருக்கமானவராக இருந்தார். மாவட்டங்களில் அதிலும் குறிப்பாக தென் மாவட்டங்களில் அவர் சொன்னதுதான் வேத வாக்காக இருந்தது. அந்த மாவட்டங்களில் ஒரு சின்ன பிரச்சனை என்றால் கூட ஐ.பியின் ஆலோசனைப்படியே தலைமை செயல்பட்டது.
’’இதெல்லாம் இப்போது பழங்கதையாகிவிட்டது’’ என பொறுமுகிறார்கள் ஐ.பி ஆதரவாளர்கள். நேரு முதன்மைச் செயலாளராக மகுடம் சூட்டப்பட்ட பின்னர் ஐ.பியின் முக்கியத்துவம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது. அறிவாலயத்திற்கு வெறுமனே வந்துபோகும் அளவிற்குத்தான் நிலைமை இருந்தது. கொஞ்ச காலத்தில் நிலைமை சரியாகிவிடும் என பொறுமையோடு இருந்தார் பெரியசாமி.

நீயா…, நானா? – திண்டுக்கல் Vs திருச்சி


ஆனால் நாளாக நாளாக நிலைமை இன்னும் மோசமடையத் தொடங்கியது. ஐ.பியின் கோட்டையான தென் மாவட்டங்களிலும் நேருவின் ஆதிக்கம் அதிகரிக்கத் தொடங்கியது. நெல்லை உள்ளிட்ட சில மாவட்ட பிரச்சனைகளில் சமீபத்தில் நேருவே நேரடியாகத் தலையிட்டு பஞ்சாயத்து பண்ணி வைத்தார். நேருவும் சரி, தலைமையும் சரி…ஒப்புக்காகக் கூட ஐ.பியிடம் இது பற்றி மூச்சுவிடவில்லை. இது பற்றி ஐ.பிக்கு நெருக்கமான ஒருவர் நேருவிடம் கேட்டதற்கு அவர் தனது வழக்கமான பாணியில் ஏடாகூடமாக பதில் சொல்லியிருக்கிறார். விஷயம் அறிந்து ஐபி நொந்துவிட்டாராம்.
‘’ என்னை கறிவேப்பிலை மாதிரி பயன்படுத்திட்டாங்களே!’’ என நெருங்கிய வட்டத்தில் கொந்தளித்திருக்கிறார் ஐ,பி. அவரது ஆதரவாளர்கள் மத்தியிலோ அனல் தகிக்கிறது.

நீயா…, நானா? – திண்டுக்கல் Vs திருச்சி


’’கடந்த பல வருடங்களாக கட்சியை தென் மாவட்டங்களில் கட்டிக்காத்ததில் ஐ.பிக்கு முக்கிய பங்கு உண்டு. கோடிக்கணக்கில் கைக்காசைப் போட்டு மாநாடுகள் மற்றும் நிகழ்ச்சிகளை நடத்தியிருக்காரு. எம்.எல்.ஏ, எம்.பி தேர்தல்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் திமுக அமோக வெற்றிபெற்றதற்கு இவர்தான் பிரதான காரணம். இப்படி கட்சிக்காக அல்லும் பகலும் பாடுபட்டவரை தலைமை ஓரங்கட்டுவதை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
3 துணைப் பொதுச் செயலாளர்கள் இருந்த இடத்தில் ஐ.பியை டம்மி பண்ணும் வகையில் 5 பேரை போட்டாங்க. அடுத்ததா மொத்த அதிகாரத்தையும் நேருகிட்ட தூக்கிக் கொடுத்திட்டாங்க. சீனியாரிட்டிக்கும், ஓயாத உழைப்பிற்கும் அவ்வளவுதானா மரியாதை!’’ என அனல் கக்குகிறார்கள் ஐ.பி ஆதரவாளர்கள்.
’’அதிருப்தியில் இருக்கும் ஐ,பியை தலைமை விரைந்து சரிக்கட்ட வேண்டும். இல்லாவிட்டால் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை நிலைமை இன்னும் மோசமாகும்’’ என அபாயச் சங்கு ஊதுகிறார்கள் அப்பகுதிகளைச் சேர்ந்த மூத்த திமுக நிர்வாகிகள்.