“எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” செய்தியாளர்களுக்கு பிடிகொடுக்காமல் ஓடிய கே.என்.நேரு

 

“எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” செய்தியாளர்களுக்கு பிடிகொடுக்காமல் ஓடிய கே.என்.நேரு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் கடந்த 6 ஆம் தேதி நடந்து முடிந்த நிலையில் வரும் மே 2 வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த நாளை எதிர்பார்த்து அரசியல் கட்சிகள் காத்திருக்கின்றன. அதேசமயம் வாக்கு எண்ணிக்கை மையங்களை தீவிரமாக கண்காணியுங்கள் என்று அந்தந்த அரசியல் கட்சி தலைமைகள்நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

“எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” செய்தியாளர்களுக்கு பிடிகொடுக்காமல் ஓடிய கே.என்.நேரு

குறிப்பாக திருச்சியில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் 4 மையங்களில் எண்ணப்பட உள்ளது. திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியிலும், ஸ்ரீரங்கம், மணப்பாறை, திருவெறும்பூர் தொகுதிகளில் பதிவான வாக்குகள் பஞ்சப்பூர் சாரநாதன் பொறியியல் கல்லூரியிலும் எண்ணப்படுகின்றன. அதேபோல் லால்குடி, மண்ணச்சநல்லூர் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்குகள் சமயபுரம் ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியிலும், துறையூர், முசிறி தொகுதிகளில் பதிவான வாக்குகள் துறையூர் இமயம் பொறியியல் கல்லூரி வளாகத்திலும் எண்ணப்படுகின்றன. இந்த முறை கொரோனா காரணமாக வாக்கு மையங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உள்ள மேற்கூறிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

“எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” செய்தியாளர்களுக்கு பிடிகொடுக்காமல் ஓடிய கே.என்.நேரு

இந்நிலையில் திருச்சி ஜமால் முகமது கல்லூரி வளாகத்தில் வாக்கு இயந்திரங்கள் உள்ள இடத்தை திமுக முதன்மை செயலாளரும், திருச்சி மேற்கு தொகுதி வேட்பாளரான கே.என்.நேரு, இன்று பார்வையிட்டார். அப்போது செய்தியாளர்கள் நேருவை சூழ்ந்த நிலையில் பேட்டி கொடுக்காமல் அங்கிருந்து சென்றார்.
அப்போது நிருபர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் எப்படி உள்ளது என்று கேள்வி எழுப்பிய நிலையில், “எது நடக்கிறதோ நன்றாகவே நடக்கிறது; எது நடக்குமோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்று கூறி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.