“பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழுவுடன் தகராறு?” : என்ன சொல்கிறார் கே.என்.நேரு

“பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழுவுடன் தகராறு?” : என்ன சொல்கிறார் கே.என்.நேரு

ஐபேக் குழுவினரோடு எந்த பிரச்னையும் இல்லை என்று கே.என்.நேரு விளக்கமளித்துள்ளார்.

“பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழுவுடன் தகராறு?” : என்ன சொல்கிறார் கே.என்.நேரு

வழக்கமாக தேர்தல் நேரத்தில் பிரம்மாண்ட மாக 2 அல்லது 3 நாட்கள் திமுக மாநாடு நடத்துவது வழக்கம். தொண்டர்களை உற்சாகப்படுத்த நடத்தப்படும் மாநாடு பொதுவாக திருச்சியில் கே.என். நேரு பொறுப்பில் தான் அரங்கேறும். அந்த வகையில் இந்தாண்டு 11 ஆவது மாநாட்டை நடத்த திமுக திட்டமிட்டுள்ளது. இருப்பினும் திமுகவிற்கு தேர்தல் வியூகம் வகுத்து தரும் பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழு பிரம்மாண்டமாக இல்லாமல், திறந்தவெளியில் ஒரே ஒருநாள் மட்டும் மாநாடு நடத்த கூறியுள்ளதாம். இதனால் திமுக நிர்வாகிகள் அப்செட்டாம்.அத்துடன் ஐபேக் – திமுக நிர்வாகிகளிடம் ஒத்த கருத்து இல்லை என்றும் இதனால் மாநாடு பணியில் தொய்வு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

“பிரசாந்த் கிஷோரின் ஐபேக் குழுவுடன் தகராறு?” : என்ன சொல்கிறார் கே.என்.நேரு

இந்நிலையில் இதுகுறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்துள்ள கட்சியின் முதன்மை செயலாளர் கே.என். நேரு, “திட்டமிட்டபடி மாநாடு நடக்கும். மாநாட்டு தேதியை திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் சில நாட்களில் அறிவிப்பார். ஸ்டாலினை முதல்வராக்கும் மாநாடாகவ இது அமையும். ஐபேக் குழுவினரோடு எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. அவர்களுடன் பயணிப்பது புதிய அனுபவமாக உள்ளது. அவர்கள் எங்களின் வெற்றிக்காகவே பாடுபடுகிறார்கள்” என்றார்.