என்னது..திமுக கூட்டணியில் அதிருப்தி இல்லையா?.. என்ன சொல்கிறார் கே.என்.நேரு

 

என்னது..திமுக கூட்டணியில் அதிருப்தி இல்லையா?.. என்ன சொல்கிறார் கே.என்.நேரு

திமுக தலைவர் ஸ்டாலின் முதல்வராக போட்டியிடும் முதல் சட்டமன்றத் தேர்தல் இது. எப்படியாவது ஆட்சியை பிடித்தே ஆக வேண்டுமென முழு வீச்சில் களமிறங்கியிருக்கும் திமுக, ஐபேக் நிறுவனத்துடன் கை கோர்த்துள்ளது. வெற்றி மகுடத்தை ஸ்டாலினே சூட்டுவார் என தேர்தல் கருத்து கணிப்புகளும் கூறுகின்றன. இத்தகைய சூழலில், தொகுதி பங்கீட்டில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறது திமுக தலைமை.

என்னது..திமுக கூட்டணியில் அதிருப்தி இல்லையா?.. என்ன சொல்கிறார் கே.என்.நேரு

விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியாகிவிட்டது. மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் இந்திய முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதியும் ஒதுக்கியாகிவிட்டது. பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் திமுகவின் செயல்பாடுகள் குறித்து கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டாக பேட்டியளித்தனர்.

என்னது..திமுக கூட்டணியில் அதிருப்தி இல்லையா?.. என்ன சொல்கிறார் கே.என்.நேரு

அப்போது பேசிய கே.என்.நேரு, இன்னும் இரண்டு அல்லது மூன்று கட்ட பேச்சுவார்த்தைகளில் தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும். பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக போட்டியிடும். எத்தனை தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்பதை மு.க ஸ்டாலின் அறிவிப்பார் தனிச் சின்னம் தொடர்பான விவகாரம் எங்களுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் உள்ள பிரச்சினை என்று கூறினார்.

மேலும், உதயநிதி பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது என தெரிவித்த கே.என்.நேரு, பிக் பிரதர் என்ற மனப்பான்மையுடன் கூட்டணி கட்சிகளுடன் திமுக செயல்படவில்லை என்றும் தேர்தலுக்காக வன்னியர் இட ஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிவித்திருக்கிறது என்றும் கூறினார்.

என்னது..திமுக கூட்டணியில் அதிருப்தி இல்லையா?.. என்ன சொல்கிறார் கே.என்.நேரு

திமுக கூட்டணியில் அதிருப்தி இல்லையென கே.என்.நேரு தெரிவித்திருப்பது அரசியல் ரீதியாக உற்றுநோக்கப்படுகிறது. காரணம், இன்று காலை திமுக – மார்க்சிஸ்ட் உடனான பேச்சுவார்த்தையில் அதிருப்தி அடைந்த மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுக்காமலேயே சென்று விட்டனர். 12 தொகுதிகளை கேட்ட மார்க்சிஸ்ட்க்கு 6 தொகுதிகள் கொடுக்க திமுக முன்வந்ததால் இந்த பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. திமுக மீது மார்க்சிஸ்ட் அதிருப்தியில் இருப்பது அப்பட்டமாக தெரிய வந்திருக்கும் நிலையில், கே.என்.நேரு இவ்வாறு கூறியிருப்பது கூட்டணிக் கட்சியினரை திரும்பி பார்க்க வைத்துள்ளது.