“நமக்குள்ள மோதிக்கலாம்… அவன் உள்ள வர கூடாது” – டீல் பேசி இனிகோவை ஒழித்துக்கட்டும் நேரு-அன்பில் மகேஷ் கோஷ்டி!

“நமக்குள்ள மோதிக்கலாம்… அவன் உள்ள வர கூடாது” – டீல் பேசி இனிகோவை ஒழித்துக்கட்டும் நேரு-அன்பில் மகேஷ் கோஷ்டி!

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் ஐந்து முனைவர்கள் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். அதில் ஒருவர் இனிகோ இருதயராஜ். இவர் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். திருச்சி கிழக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். கட்சி தலைமை அறிவிப்பதற்கு முன்பே பிரச்சார களத்திலும் இனிகோ குதித்துவிட்டார். அவரின் இந்தச் செயல் திமுகவின் பரம எதிரியான அதிமுகவுக்கு கூட எதுவும் செய்யவில்லை. ஆனால் திருச்சி திமுகவில் இருக்கும் இரு கோஷ்டிகளின் நெஞ்சில் சுருக்கென்று தைத்துவிட்டது. நம்மை மீறி ஒருவன் வளரலாமா என்ற வன்மம் தான் அதற்குக் காரணம்.

“நமக்குள்ள மோதிக்கலாம்… அவன் உள்ள வர கூடாது” – டீல் பேசி இனிகோவை ஒழித்துக்கட்டும் நேரு-அன்பில் மகேஷ் கோஷ்டி!

விஷயம் அதுவல்ல. திருச்சியில் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்ளும் அந்த இரண்டு கோஷ்டிகள் இனிகோவை எதிர்க்க கைகோர்த்திருக்கின்றன. எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அரசியல் அடிநாதத்தைக் கச்சிதமாகப் பிடித்து உள்ளடி வேலைகளில் ஈடுபட்டுவருகின்றனர். திருச்சி திமுக தளபதியாக வலம் வந்தவர் கே.என். நேரு. அவரைக் கட்சியில் டம்மியாக்க அன்பில் மகேஷ்-உதயநிதி ஸ்டாலின் நண்பர் கூட்டணி தீவிர முயற்சியில் இறங்கியது. கிட்டத்தட்ட வெற்றியையும் கண்டுவிட்டது. இதனால் திருச்சியில் அன்பில் மகேஷ் கோஷ்டிக்கும் நேரு கோஷ்டிக்கும் அடிக்கடி முட்டிக்கொள்ளும்.

“நமக்குள்ள மோதிக்கலாம்… அவன் உள்ள வர கூடாது” – டீல் பேசி இனிகோவை ஒழித்துக்கட்டும் நேரு-அன்பில் மகேஷ் கோஷ்டி!

இவர்கள் இணையும் புள்ளியாக இனிகோ இருதயராஜ் இருக்கிறார். தங்களை மீறி மேலிட செல்வாக்கை பயன்படுத்தி இனிகோ சீட்டு வாங்கிவிட்டதால் நேருவுக்கும் மகேஷுக்கும் பிடிக்கவில்லை. அதற்குக் காரணம் இனிகோ இரண்டு தரப்புகளிடமும் அன்னந்தண்ணி புழங்கவில்லை. அதேபோல உள்ளூர் திமுககாரர்களைக் கண்டுகொள்ளாமல் தனக்கு வேண்டப்பட்ட ஆட்களை சென்னையிலிருந்து இறக்கி படோடபமாக சுற்றி வந்தார். சும்மா விடுவார்களா அந்த இரு கோஷ்டியும். தலைமையிடம் அடுக்கடுக்க புகார் தெரிவிக்க நேருவை வைத்து சமாதானம் பேச தலைமை பணித்திருக்கிறது.

“நமக்குள்ள மோதிக்கலாம்… அவன் உள்ள வர கூடாது” – டீல் பேசி இனிகோவை ஒழித்துக்கட்டும் நேரு-அன்பில் மகேஷ் கோஷ்டி!

இது தான் சமயம் என்று களத்தில் இறங்கி இனிகோவை வார்த்தைகளால் விரட்டி விரட்டி அடித்துவிட்டாராம். “உன்னோட பணமெல்லாம் இங்கே செல்லுபடியாகாது. உள்ளூர் கட்சிக்காரர்களை அனுசரிக்கலேனா ஒரு மண்ணும் எடுபடாது” என்று லெப்ட் அன்ட் ரைட் வாங்கியிருக்கிறார் நேரு. நேருவிடம் ம்ம் கொட்டிவிட்டு பழைய நிலையிலிருந்து மாறாமல் திமிராகவே திருச்சியை வலம் வந்துகொண்டிருக்கிறாராம் இனிகோ. “என்னதா இருந்தாலும் நமக்குள்ள அடிச்சிக்கலாம்; மூனாவதா ஒருத்தன் உள்ள வரக் கூடாது; அதனால இனிகோவுக்கு ஆதரவா வேல செய்ற மாறி படம் காட்டி கவுத்திருவோம்” என்று இரு கோஷ்டிகளும் ரகசிய உடன்படிக்கை போட்டிருக்கிறார்களாம்.