கேஎல் ராகுல் அவுட்… இந்தியாவுக்கு அடி மேல் அடி… 3ஆவது டெஸ்டில் என்ன செய்யப்போகிறது?

 

கேஎல் ராகுல் அவுட்… இந்தியாவுக்கு அடி மேல் அடி…  3ஆவது டெஸ்டில் என்ன செய்யப்போகிறது?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து கேஎல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு மணிக்கட்டில் ஏற்பட்ட காயத்தால் நீக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரில் பங்கேற்றுவருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து மூன்றாவது போட்டி நாளை மறுநாள் (ஜன.7) தொடங்கவிருக்கிறது.

கேஎல் ராகுல் அவுட்… இந்தியாவுக்கு அடி மேல் அடி…  3ஆவது டெஸ்டில் என்ன செய்யப்போகிறது?
உமேஷ் யாதவ் சக வீரர்களுடன்

இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். பயிற்சியின்போது பேட்டிங் செய்துகொண்டிருந்த கேஎல் ராகுலின் மணிக்கட்டில் பந்து பலமாகத் தாக்கியுள்ளது. இதனால் ஏற்பட்ட வீக்கம் ஓரிரு நாளில் சரியாகிவிடும். அவர் அணிக்குள் திரும்பிவிடுவார் என அணி நிர்வாகம் எதிர்பார்த்திருந்தது. ஆனால் வீக்கம் வற்றவில்லை.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் போன ஹனுமா விஹாரிக்குப் பதிலாக கேஎல் ராகுலைக் களமிறக்க அணி நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால் அவருக்குக் காயம் ஆறாததால் அடுத்த போட்டி மட்டுமல்லாமல் தொடரிலிருந்தே நீக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு மூன்று வாரங்கள் ஓய்வு தேவைப்படுவதாக மருத்துவக் குழு தெரிவித்துள்ளது. பிப்ரவரியில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு வருகைதரவிருக்கிறது. நான்கு டெஸ்ட், ஐந்து டி20, மூன்று ஒருநாள் தொடர்களில் ஆடவிருக்கிறது. இந்தத் தொடர்களில் வெல்வதற்கு கேஎல் ராகுலின் பங்கு நிச்சயம் அணிக்குத் தேவைப்படும். இங்கிலாந்துடனான தொடரில் அவர் களமிறங்குவது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.

கேஎல் ராகுல் அவுட்… இந்தியாவுக்கு அடி மேல் அடி…  3ஆவது டெஸ்டில் என்ன செய்யப்போகிறது?
முகமது ஷமி

ஏற்கனவே, இஷாந்த் சர்மா, ஷமி, உமேஷ் யாதவ் ஆகிய முன்னணி பவுலர்கள் இல்லாமல் இந்திய அணி பெரும் பின்னடைவைச் சந்திந்திருந்தது. மேலும் கேப்டன் கோலி மனைவியின் பிரசவத்திற்காகத் தொடரின் பாதியிலேயே இந்தியா திரும்பினார். இச்சூழலில் கேஎல் ராகுலின் காயம் அணிக்குக் கூடுதல் பாரத்தை ஏற்றியுள்ளது என்றே கூற வேண்டும். இருப்பினும், ஹிட்மேன் ரோஹித் சர்மா அணியுடன் இணைந்துள்ளது நம்பிக்கையளிக்கிறது.

கேஎல் ராகுல் அவுட்… இந்தியாவுக்கு அடி மேல் அடி…  3ஆவது டெஸ்டில் என்ன செய்யப்போகிறது?
ரஹானே

முக்கிய வீரர்கள் இல்லாமல் அணியைச் சிறப்பாக வழிநடத்தி, அதில் வெற்றியும் கண்ட கேப்டன் ரஹானே சிட்னியில் நடைபெறவிருக்கும் போட்டியைக் கைப்பற்ற என்ன வியூகங்கள் வகுத்திருக்கிறார் என்று நாளை மறுநாள் காணலாம்.