கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா… ஆர்சிபி போட்டி ஒத்திவைப்பு!

 

கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா… ஆர்சிபி போட்டி ஒத்திவைப்பு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால் ஐபிஎல் முக்கியமா என்று ஒரு கேள்வி எழுந்துள்ளது. கொரோனா அச்சம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து பல வீரர்கள் பாதியிலேயே விலகினர். குறிப்பாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஆடம் ஜாம்பா, கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை ஆகியோர் ஆஸ்திரேலியாவிற்குப் புறப்பட்டுச் சென்றனர். இந்திய வீரரான அஸ்வினும் தொடரிலிருந்து பாதியிலேயே விலகினார். அவரது மனைவி உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

கொல்கத்தா வீரர்களுக்கு கொரோனா… ஆர்சிபி போட்டி ஒத்திவைப்பு!

கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளது பிசிசிஐ. அதன்படி அனைவரும் பயோ பபுளில் இருக்கிறார்கள். பயோ பபுள் என்றால் அனுமதிக்கப்பட்ட இடங்கள், அதாவது ஹோட்டல்கள், மைதானம் என்றே வீரர்களின் பொழுதுகள் கழியும். இப்படிப்பட்ட பயோ பபுளிலேயே கொரோனா உள்ளே நுழைந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ஐபிஎல் நிர்வாகம், ”கடந்த நான்கு நாட்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் இருவருக்கும் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு நெகட்டிவ் என வந்துள்ளது. இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுடன் நெருங்கி பழகிய வீரர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று நடைபெறவிருந்த கொல்கத்தா-ஆர்சிபி போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.