கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தாரா?

 

கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தாரா?

திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் இன்று மாலையில் டெல்லி்யில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்ததாக தகவல் வெளியானது.  ஆனால், கு.க.செல்வம் அதை மறுத்துள்ளார்.

திமுகவின் தலைமை நிலைய செயலாளராகவும், ஆயிரம் விளக்கு தொகுதி எம்.எல்.ஏவாகவும் இருந்த கு.க.செல்வம், 1997ஆம் ஆண்டில் அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர். இத்தனை காலம் திமுகவில் இருந்தவர் மா.செ. பதவியில் ஏற்பட்ட கசப்பில்தான் பாஜகவுக்கு தாவியதாக கூறப்படுகிறது. மறைந்த ஜெ.அன்பழகன் வகித்த சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் பதவி என்பது செல்வாக்கான பதவி. அந்த பதவியை எதிர்ப்பார்த்திருந்த கு.க.செல்வம் அது கிடைக்காமல் போகவே அந்த அதிருப்தியில்தான் இன்று பாஜகவில் இணைந்ததாக கூறப்பட்டது.

திமுகவின் துணை பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட வி.பி. துரைசாமி பாஜகவில் இணைந்துள்ள நிலையில், கு.க.செல்வமும் அணி தாவியதாக சொல்லப்பட்டது திமுகவினர் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

தேர்தல் நெருங்கி வரும் சூழலில் இப்படி சீனியர்கள் அணி தாவினால் அது கட்சிக்கு எந்த விதத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல்.