பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு: கிஷோர் கே. சுவாமி மீண்டும் கைது

 

பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு: கிஷோர் கே. சுவாமி மீண்டும் கைது

பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளத்தில் இழிபடுத்தி பேசிய வழக்கில் கிஷோர் கே. சுவாமி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

பெண் பத்திரிக்கையாளர் குறித்து அவதூறு: கிஷோர் கே. சுவாமி மீண்டும் கைது

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிஷோர் கே.சுவாமி, அடிக்கடி அநாகரிகமாக பதிவிட்டு சர்ச்சையில் சிக்குவார். சமீபத்தில் அண்ணா, கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் குறித்து அவதூறாக பதிவிட்டதால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கிஷோர் கே சுவாமி மீது இதே போன்று ஏற்கனவே 14 புகார்கள் கொடுக்கப்பட்டு மேல் நடவடிக்கை எடுக்காமல் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம், பெண் பத்திரிக்கையாளர் ஒருவரை இழிவுபடுத்தும் விதமாக பதிவிட்டதால், புகார் அளிக்கப்பட்டு பெண்ணை மானபங்கம் செய்தல், பெண்ணின் மாண்புக்கு பங்கம் விளைவித்தல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக கையாளுதல் மற்றும் பெண் வன்கொடுமை ஆகிய பிரிவுளில் கிஷோர் கே சுவாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் அப்போதே அவரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமல் விடுவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு, அவ்வழக்கில் கிஷோரின் முன் ஜாமீன் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், நிலுவையில் இருந்த அவ்வழக்கில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார், ஏற்கனவே சிறையில் உள்ள கிஷோர் கே சுவாமியை மீண்டும் கைது செய்து 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.