’’கிஷான் திட் டமுறைகேடு தொகையை திரும்ப பெற்று உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்’’ – அமைச்சர் துரைகண்ணு

’’கிஷான் திட் டமுறைகேடு தொகையை திரும்ப பெற்று உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்’’ – அமைச்சர் துரைகண்ணு

கிஷான் திட்டமுறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார் முதல்வர் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு தஞ்சையில் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 11 ஆசிரியருக்கு நல்ஆசிரியர் விருது வழங்கினார் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு.

’’கிஷான் திட் டமுறைகேடு தொகையை திரும்ப பெற்று உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்’’ – அமைச்சர் துரைகண்ணு

பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’அனைத்து பகுதிகளிலும் கடைமடை வரை தண்ணீர் சென்று விட்டது. இயற்கையும் தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருக்கிறது, எந்த கவலையுமின்றி விவசாயிகள் பயிர் செய்து கொண்டிருக்கிறார்கள். விவசாயிகளிடம் ஆலோசனை செய்த பிறகே சரபாங் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி செயல்படுத்தியுள்ளார். மேலும் தகுதியுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் கடன் வழங்க முதலமைச்சர் வழங்க உத்தரவிட்டுள்ளார்’’ என அவர் தெரிவித்தார்.

’’கிஷான் திட் டமுறைகேடு தொகையை திரும்ப பெற்று உரிய விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படும்’’ – அமைச்சர் துரைகண்ணு

மேலும், பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். இந்த முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மேலும் அவர்களிடம் இருந்து தொகையானது திரும்பப் பெற்றுக் கொண்டு வருவதாகவும், அதை உரிய விவசாயிகளிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.