அறிமுக போட்டியிலேயே இவ்வளவு சாதனைகளா? – வாயை பிளக்க வைக்கும் “மும்பை பீஸ்ட்” இஷான் கிஷான்!

அறிமுக போட்டியிலேயே இவ்வளவு சாதனைகளா? – வாயை பிளக்க வைக்கும் “மும்பை பீஸ்ட்” இஷான் கிஷான்!

ஐபிஎல் தொடரில் ஜொலித்த இளம் வீரர்கள் அடங்கிய இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த அணி பயிற்சியாளர் டிராவிட் தலைமையில் சென்றிருக்கிறது. ஷிகார் தவான் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார். முதல் ஒருநாள் தொடர் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் அறிமுக வீரர்களாக மும்பை இந்தியன்ஸில் அதிரடியாகவும் பொறுப்புடனும் விளையாடி இஷான் கிஷானும் சூர்யகுமார் யாதவும் களமிறங்கினர்.

அறிமுக போட்டியிலேயே இவ்வளவு சாதனைகளா? – வாயை பிளக்க வைக்கும் “மும்பை பீஸ்ட்” இஷான் கிஷான்!

டாஸ் வென்று பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 262 ரன்கள் எடுத்தது. இதையடுத்து இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக விளையாடியது. பிரித்வி ஷா அதிரடியாக விளையாடி 43 ரன்கள் எடுத்தார். கேப்டன் தவான் பொறுப்புடன் விளையாடி 86 ரன்கள் எடுத்தார். மனிஷ் பாண்டேவை தவிர்த்து அடுத்தடுத்து வந்த இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இலங்கை பந்துவீச்சாளர்களை பந்தாடினர். இதனால் 36.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி வெற்றியைப் பதிவுசெய்தது.

அறிமுக போட்டியிலேயே இவ்வளவு சாதனைகளா? – வாயை பிளக்க வைக்கும் “மும்பை பீஸ்ட்” இஷான் கிஷான்!

இதில் அறிமுக வீரராகக் களமிறங்கிய கிஷான் பல சாதனைகள் புரிந்திருக்கிறார். அதிரடியாக விளையாடிய அவர் 33 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதன்மூலம் அறிமுக போட்டியிலேயே அதிவேகமாக அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றார். குருணால் பாண்டியா 26 பந்துகளில் அரைசதம் அடித்த முதல் வீரர். அதேபோல பிறந்தநாளில் ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் காணும் 2ஆவது இந்திய வீரர், 16ஆவது சர்வதேச வீரர் என்ற பெருமையும் அவருக்கு கிடைத்திருக்கிறது.

அறிமுக போட்டியிலேயே இவ்வளவு சாதனைகளா? – வாயை பிளக்க வைக்கும் “மும்பை பீஸ்ட்” இஷான் கிஷான்!

அறிமுக போட்டியில் அதிக ரன்கள் அடித்த முதல் விக்கெட் கீப்பர், 2001ஆம் ஆண்டுக்குப் பின் அறிமுக போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே சிக்சர் அடித்த முதல் வீரர் என்ற சாதனைகளுக்கும் சொந்தக்காரராகியிருக்கிறார். அதேபோல சர்வதேச அளவில் டி20 மற்றும் ஒருநாள் என இரு தொடர்களிலும் அறிமுக போட்டியில் அரைசதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் புரிந்திருக்கிறார் இந்த மும்பை பீஸ்ட்!