இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பாரத் பந்த்… சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.. விவசாயிகள் உறுதி

இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பாரத் பந்த்… சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.. விவசாயிகள் உறுதி

வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி விவசாயிகள் இன்று காலை 11 மணி முதல் 3 மணி வரை நாடு தழுவிய முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 5 சுற்று பேச்சுவார்த்தைகளிலும் தீர்வு காணப்படவில்லை. நாளை 6வது சுற்றுப்பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதற்கிடையே வேளாண் சட்டங்களை நீக்கக்கோரி இன்று நாடு தழுவிய முழு அடைப்புக்கு விவசாயிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பாரத் பந்த்… சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.. விவசாயிகள் உறுதி
சரக்கு வாகனங்கள்

பெரும்பாலான எதிர்க்கட்சிகள் விவசாயிகளின் பாரத் பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும் பா.ஜ.க. ஆட்சி இல்லாத மாநிலங்களில் இன்று நாடு தழுவிய முழு அடைப்பு நடைபெற உள்ளது. அதேசமயம் விவசாய சங்கங்கள் சாமானிய மக்களுக்கு எந்த பிரச்சினையும் ஏற்படுத்த விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளன. ஆகையால் இன்று காலை 11 மணிக்கு முழு அடைப்பை தொடங்கி மதியம் 3 மணிக்கு முடிக்க உள்ளார்கள். இதனால் தினசரி பயணிகள் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் வேலைக்கு சென்று திரும்பி வர முடியும்.

இன்று காலை 11 மணி முதல் மதியம் 3 மணி வரை பாரத் பந்த்… சாமானிய மக்கள் பாதிக்கப்பட மாட்டார்கள்.. விவசாயிகள் உறுதி
பாரத் பந்த்

பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் போக்குவரத்து மற்றும் டிரக் சங்கங்கள் இன்று தங்களது சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளன. பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தானில் மண்டிகள் இன்று மூடப்பட்டு இருக்கும். பஞ்சாபில் ஹோட்டல்கள், பார்கள், ரெஸ்ட்ராண்ட்கள் திறக்கப்படாது. டெல்லி, என்.சி.ஆரில் சில ஆட்டோ மற்றும் டாக்சி சங்கங்கள் பாரத் பந்துக்கு ஆதரவு அளித்துள்ளதால் பயணிகள் சிரமங்களை எதிர்கொள்ளலாம். அதேசமயம் அனைத்திந்திய வங்கி பணியாளர்கள் சங்கம் பாரத் பந்தில் பங்கேற்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளதால் இன்று வங்கிகள் வழக்கம் போல் செயல்படும். போக்குவரத்து துறை வழக்கம் போல் செயல்படும் என்று அனைத்திந்திய டிரான்ஸ்போர்ட்டர்ஸ் நல சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அவசர, ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவ சேவைகள் பாதிக்கப்படாது.