கிசான் திட்ட முறைகேடு: ஆட்சியர் எச்சரிக்கை!

 

கிசான் திட்ட முறைகேடு: ஆட்சியர் எச்சரிக்கை!

கிசான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் பணத்தை முறையாக திருப்பி செலுத்த வேண்டும் என வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் முறைகேடு நடந்திருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. சுமார் ரூ.110 கோடி அளவிற்கு மோசடி நடந்திருப்பதாக வேளாண்துறை செயலாளர் தெரிவித்தார். இதனையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்ட நபர்களிடம் இருந்து பணத்தை திரும்பப்பெறும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. இதுவரை ரூ.105 கோடி வசூலிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.

கிசான் திட்ட முறைகேடு: ஆட்சியர் எச்சரிக்கை!

இந்த நிலையில், தகுதியற்ற பயனாளிகள் பணத்தை தங்கம் வங்கிக் கணக்கில் செலுத்தவில்லை என்றால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். வேலூரில் 789 பேர் கிசான் திட்டத்தில் ரூ.19.6 லட்சத்தை முறைகேடாக பெற்றுள்ளனர் என்றும் கண்டுபிடிக்கப்பட்ட 2,685 தகுதியற்ற பயனாளிகளிடம் இருந்து இதுவரை ரூ.1.03 கோடி மீட்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.