கிசான் முறைகேட்டில் இதுவரை ரூ. 72 கோடி வசூல் : அமைச்சர் துரைக்கண்ணு

கிசான் முறைகேட்டில் இதுவரை ரூ. 72 கோடி வசூல் : அமைச்சர் துரைக்கண்ணு

புதிய வேளாண் திருத்த சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அமைச்சர் துரைக்கண்ணு விளக்கமளித்துள்ளார்.

கிசான் முறைகேட்டில் இதுவரை ரூ. 72 கோடி வசூல் : அமைச்சர் துரைக்கண்ணு

பிரதமரின் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த திட்டத்தை பயன்படுத்தி தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் விவசாயி அல்லாதோரும் நிதியுதவி பெற்றிருப்பது ஆய்வில் அம்பலமானது. இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசார் வசம் சென்றது. இதை தொடர்ந்து முறைகேடாக பணம் பெற்றவர்களிடமிருந்து மீண்டும் அந்த தொகையானது திரும்ப பெறப்பட்டு வருகிறது. இப்படி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கிருஷ்ணகிரி, சேலம் என பல மாவட்டங்களில் கோடிக்கணக்கான பணம் மீண்டும் அரசு கணக்கில் வைப்பு வைக்கப்பட்டு வருகிறது.

கிசான் முறைகேட்டில் இதுவரை ரூ. 72 கோடி வசூல் : அமைச்சர் துரைக்கண்ணு

இந்நிலையில் இதுகுறித்து கூறும் வேளாண்மை துறை அமைச்சர் துரைக்கண்ணு, தமிழகத்தில் கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்களிடமிருந்து இதுவரை ரூ. 72 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், புதிய வேளாண் திருத்த சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறினார்.