கிசான் திட்ட முறைகேடு: 2 இடைத்தரகர்கள் அதிரடி கைது!

 

கிசான் திட்ட முறைகேடு: 2 இடைத்தரகர்கள் அதிரடி கைது!

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட 2 இடைத்தரகர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.

விவசாயிகளுக்காக நிதியுதவி வழங்கும் கிசான் திட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மோசடி நடைபெற்றிருப்பது அண்மையில் வெளிச்சத்துக்கு வந்தது. சுமார் ரூ.110 கோடி அளவில் பணம் கையாடல் செய்யப்பட்டிருப்பதாக தெரியவந்ததையடுத்து, வழக்கு விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி அரசு உத்தரவிட்டது. அதன் படி, விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் விவசாயிகள் அல்லாத லட்சக்கணக்கான பேர் இத்திட்டத்தில் நிதியுதவி பெற்றதை கண்டுபிடித்தனர்.

கிசான் திட்ட முறைகேடு: 2 இடைத்தரகர்கள் அதிரடி கைது!

இதனையடுத்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், கிசான் திட்டத்தில் முறைகேடாக பணம் பெற்றவர்களிடம் இருந்து பணத்தை திரும்பப்பெறும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை ரூ.60 கோடி ரூபாய் மீட்கப்பட்டிருப்பதாக வேளாண்துறை அமைச்சர் தெரிவித்தார். இதனிடையே இந்த முறைகேட்டில் முக்கியப்பங்கு வகித்த நபர்களை சிபிசிஐடி அதிகாரிகள் அதிரடியாக கைது செய்து வருகின்றனர்.

கிசான் திட்ட முறைகேடு: 2 இடைத்தரகர்கள் அதிரடி கைது!

அந்த வகையில் இன்று காஞ்சிபுரத்தை சேர்ந்த 2 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.