கிசான் முறைகேடு திட்டம் சிபிஐ விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை!

 

கிசான் முறைகேடு திட்டம் சிபிஐ விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை!

தமிழகத்தில் கிசான் திட்டத்தில் நடந்துள்ள முறைகேடு பற்றி சிபிஐ விசாரிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 நிதியுதவி வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மோசடி நடந்திருப்பது சமீபத்தில் அம்பலமானது. இதனையடுத்து எந்தெந்த மாவட்டங்களில், விவசாயிகள் அல்லாதோர் இத்திட்டத்தில் பணம் பெற்றுள்ளனர் என்பது குறித்து அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கோடிக்கணக்கில் பணம் கையாடல் செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

கிசான் முறைகேடு திட்டம் சிபிஐ விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை!

அண்மையில் இது குறித்து பேசிய வேளாண்துறை செயலாளர் ககன் தீப் சிங், தமிழகத்தில் சுமார் ரூ.110 கோடி அளவில் கிசான் திட்டத்தில் மோசடி நடந்துள்ளதாகவும் ரூ.30 கோடி திரும்பப்பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், கிசான் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

கிசான் முறைகேடு திட்டம் சிபிஐ விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் கோரிக்கை!

இந்த நிலையில் கிசான் திட்ட மோசடி குறித்து சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், இந்த மோசடிக்கு காரணமானவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.