‘கிசான் திட்டத்தில் 42 ஆயிரம் பேர் மோசடி’.. விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5.75 கோடி வசூல்!

 

‘கிசான் திட்டத்தில் 42 ஆயிரம் பேர் மோசடி’.. விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5.75 கோடி வசூல்!

விழுப்புரம் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களிடம் இருந்து ரூ.5.75 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கடன் வழங்கும் விதமாக தொடங்கப்பட்ட பிரதமரின் கிசான் திட்டத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் மோசடி செய்ததாக புகார் எழுந்தது. லட்சக்கணக்கான மக்கள் பயனடைந்து வரும் இந்த திட்டத்தில் மோசடி செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேளாண்துறை அமைச்சர் உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில், அதிகாரிகள் மோசடி நடந்ததாக புகார் எழுந்த எல்லா மாவட்டங்களிலும் அதிரடியாக ஆய்வு செய்தனர்.

‘கிசான் திட்டத்தில் 42 ஆயிரம் பேர் மோசடி’.. விழுப்புரம் மாவட்டத்தில் ரூ.5.75 கோடி வசூல்!

அந்த ஆய்வில், விவசாயிகள் அல்லாதோருக்கு இத்திட்டத்தில் பணம் கொடுக்கப்பட்டது அம்பலமானதாக கூறப்படுகிறது. குறிப்பாக கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மோசடி செய்தனர். இதனையடுத்து இது தொடர்பான வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மட்டுமே கிசான் திட்டத்தில் மோசடி செய்ததாக ரூ.6.80 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டதாக நேற்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் 42 ஆயிரம் பேர் இத்திட்டத்தில் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. அந்த 42 ஆயிரம் பேரிடம் இருந்து வங்கிக் கணக்குகள் மூலமாக இதுவரை ரூ.5.75 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் கிசான் முறைகேடு தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.