darbar
  • January
    28
    Tuesday

Main Area

Main



'அட்ரஸ் கேட்பவர்களிடம் அலர்ட்டாக இருங்கள் பெண்களே': மனவள ஆலோசகர் எச்சரிக்கை 

கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி
கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி

சென்னை ஓ.எம்.ஆர் சாலையில் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் ஒருவர் முகவரி கேட்பது போல் காரை வழிமறித்துப் பேசியுள்ளார். அப்போது அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த பெண் காரை நிறுத்தி கண்ணாடியை இறக்கியுள்ளார். அந்தப்பெண்ணை நோட்டமிட்ட நபர் நகைகள் இல்லையா என்று கேட்டு கடுமையான வார்த்தையில் திட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்தவர் அவர் அந்த நபரைப் பிடிக்க முயற்சித்துள்ளார்.  இருப்பினும் அவன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

அந்த பெண் வேறு யாரும் இல்லை மனவள ஆலோசகர் கீர்த்தன்யா கிருஷ்ணமூர்த்தி தான். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், 'பெருங்குடியிலிருந்து வந்து கொண்டு இருந்த சமயத்தில் என்னை ஒரு இருசக்கர வாகனம் பின் தொடர்ந்து கொண்டே வந்தார். அப்போவே எனக்கு சந்தேகம் எழுந்தது. பொதுவாக நான் தங்க நகைகள் அணிவதில்லை என்பதால் அந்த கொடூர சம்பவத்திலிருந்து தப்பிவிட்டேன். இதையடுத்து, அருகிலிருந்த கடைக்குச் சென்று சி.சி.டி.வி. கேமரா பதிவை வாங்கினேன். ஆனால் தூசி காரணமாகப் பதிவுகள் தெளிவின்றி இருந்ததால்  காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.  

மேலும் மற்றவர்களுக்கு இது போல நடப்பது தெரிய வேண்டும் என்பதால் தான் முகநூலில் பதிவிட்டேன் என்று கூறியுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.