கோவையில் குடியேறுகிறார் கிரண்பேடி…

 

கோவையில் குடியேறுகிறார் கிரண்பேடி…

புதுச்சேரியில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சியிலிருந்து அடுத்தடுத்து 4 எம்எல்ஏ க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும்சூழலில் எம்எல்ஏக்கள் ராஜினாமா அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்த சில நாட்களாகவே புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறக்கோரி காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தர்ணா, உண்ணாவிரதம் என பல தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் எதிரொலியால் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி ஆளுநராக தற்போதைய தெலுங்கானா ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் கூடுதலாக பொறுப்பு வகிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் குடியேறுகிறார் கிரண்பேடி…

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட கிரண்பேடி ஐபிஎஸ், கோவை மாவட்டத்தில் குடியேற இருப்பதாக தெரிகிறது. கோவையை அடுத்த தொண்டாமுத்தூரில் மிக பிரம்மாண்டமான மாளிகை ஒன்று கிரண்பேடிக்காக கட்டப்பட்டு வருவதாக பி.ஜே.பி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.