புதுச்சேரி ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கம்! தமிழிசைக்கு ஜாக்பாட்!!

 

புதுச்சேரி ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கம்! தமிழிசைக்கு ஜாக்பாட்!!

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண் பேடி நீக்கப்பட்டார்.

புதுச்சேரி 2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கிரண் பேடி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியின் முதல்வராகப் பதவியேற்றார். இருவருக்குமிடையே அன்று முதல் இன்று வரை அதிகார மோதல் நடைபெற்று கொண்டே தான் இருந்தது. கடந்த சில நாட்களாகவே புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறக்கோரி காங்கிரஸ், கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம், ஊர்வலம், தர்ணா, உண்ணாவிரதம் என பல தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

புதுச்சேரி ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கம்! தமிழிசைக்கு ஜாக்பாட்!!

இந்த சூழலில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து கிரண்பேடி நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி ஆளுநராக தற்போதைய தெலுங்கானா ஆளுநரான தமிழிசை செளந்தரராஜன் கூடுதலாக பொறுப்பு வகிப்பார். இந்த அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ளார்.