பஞ்சாப் vs கொல்கத்தா… பாயிண்ட் டேபிளில் முன்னேற போவது யார்? #IPL #KIXPvsKKR

பஞ்சாப் vs கொல்கத்தா… பாயிண்ட் டேபிளில் முன்னேற போவது யார்? #IPL #KIXPvsKKR

ஐபிஎல் தொடரில் இன்றைய மோதல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டியில் நூலிழையில் வெற்றியைத் தவற விட்டது பஞ்சாப்.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய கொல்கததா. தினேஷ் கார்த்திக், கில் இருவரும் சதமடித்தும் ஸ்கோர் பெரியளவில் உயரவில்லை. 164 ரன்களுக்குள் கொல்கத்தாவைச் சுருட்டியது பஞ்சாப்.

பஞ்சாப் vs கொல்கத்தா… பாயிண்ட் டேபிளில் முன்னேற போவது யார்? #IPL #KIXPvsKKR

அடுத்து ஆடிய பஞ்சாப் அணியில் ராகுல் அதிரடியில் 74 ரன்கள் சேர்க்க, மயங் அகர்வால் 56 ரன்கள் சேர்க்க, 18 ஓவர் முடிவில் 145 ரன்கள் எனும் நிலையில் இருந்தது பஞ்சாப். 12 பந்துகளில் 20 ரன்கல் என எளிய வெற்றி இலக்கே கண் இருந்தது. ஆனால், கிருஷ்ணாவில் பந்து வீச்சில் ராகுல், சிங் இருவர் விக்கெட்டுகள் விழ 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

6 பந்துகளில் 14 ரன்கள் என்பதும் டி20 போட்டியில் சிரமமான ஒன்றல்ல. ஆனால், சுனில் நரேனின் மாயப் பந்து வீச்சில் 11 ரன்கள் மட்டுமே எடுக்க 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது பஞ்சாப்.

பஞ்சாப் vs கொல்கத்தா… பாயிண்ட் டேபிளில் முன்னேற போவது யார்? #IPL #KIXPvsKKR

கொல்கத்தா அணியில் திரிப்பாதி, கில், ரானா, கேப்டன் மோர்கன், தினேஷ் கார்த்திக், கிம்மின்ஸ் என பேட்டிங் வலுவாக இருக்கிறது. பவுலிங்கிலும் கிருஷ்ணா, சுனில் நரேன், ரானா என நல்ல நிலையில் இருக்கிறது. அதுவும் டெல்லி எதிராக 20 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வருண் சக்கரவத்தி நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

பஞ்சாப் அணியில் ராகுல், மயங் அகர்வால், கிறிஸ் கெயில், பூரண் ஆகியோர் பேட்டிங்கிலும், கிறிஸ் ஜோர்டன், முகம்மது ஷமி, முருகன் அஸ்வின் பவுலிங்கில் தோள் கொடுக்க தயராக இருக்கிறார்கள்.

பஞ்சாப் vs கொல்கத்தா… பாயிண்ட் டேபிளில் முன்னேற போவது யார்? #IPL #KIXPvsKKR

எல்லாவற்றையும் விட, பாயிண்ட் டேபிள் விஷயங்கள்தான் முக்கியமானவை. 11 போட்டிகளில் 6-ல் வென்று 12 புள்ளிகளோடு நான்காம் இடத்தில் உள்ளது கொல்கத்தா. 11-ல் 5-ல் வென்று ஐந்தாம் இடத்தில் உள்ளது பஞ்சாப். ரன்ரேட் நன்றாக வைத்துள்ள கொல்கத்தா இன்று வென்றால் மூன்றாம் இடத்துக்குச் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

பஞ்சாப் vs கொல்கத்தா… பாயிண்ட் டேபிளில் முன்னேற போவது யார்? #IPL #KIXPvsKKR

நல்ல நெட்ரன்ரேட்டில் பஞ்சாப் அணி இன்று வெல்லும்பட்சத்தில் நான்காம் இடம் முன்னேறினாலும் ஆச்சர்யமில்லை. இன்னும் சொல்லப்போனால், ப்ளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பின் விளிம்பில் இரு அணிகளும் நிற்கின்றன. எனவே, வெற்றிகாகக் கடும் போராட்டத்தை இரு அணிகளும் நிகழ்த்தும் என்பதில் சந்தேகமில்லை.