பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் ஆசைக்கு குறுக்கே நிற்குமா ராஜஸ்தான்! #IPL #RRvsKXIP

பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் ஆசைக்கு குறுக்கே நிற்குமா ராஜஸ்தான்! #IPL #RRvsKXIP

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியை எதிர்கொள்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி.

12 போட்டிகளில் 6 –ல் வென்று 12 புள்ளிகளோடு பஞ்சாப் பாயிண்ட் டேபிளில் 4 இடத்தில் உள்ளது. 12 போட்டிகலில் 5-ல் வென்று 10 புள்ளிகளோடு 7-ம் இடத்தில் உள்ளது ராஜஸ்தான். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற பஞ்சாப் அணிக்கே அதிக வாய்ப்பிருக்கிறது. நேற்றைய போட்டியில் கொல்கத்தா தோல்வி அடைந்ததால் நிம்மதி அடைந்தது பஞ்சாப்தான். இல்லையெனில் போட்டி இன்னும் வலுத்திருக்கும்.

பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் ஆசைக்கு குறுக்கே நிற்குமா ராஜஸ்தான்! #IPL #RRvsKXIP

இன்றைய போட்டியில் ராஜஸ்தான் வெல்லும்பட்சத்தில் 12 புள்ளிகளோடு மேலே செல்லும். மிக அதிக ரன்ரேட் அடிப்படையில் ராஜஸ்தான் வெல்லும்பட்சத்தில் 4 இடத்திற்குக்கூடச் செல்ல முடியும். அதற்கான ஊக்கத்தோடு அது ஆடும். இன்றும் அடுத்த போட்டியில் கொல்கத்தாவையும் வென்றுவிட்டால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு ஏற்படலாம். மாறாக தோற்றுவிட்டால் பிளே ஆஃப் என்பது கனவாகி விடும்.

பஞ்சாப் இன்றும் வென்றும் அடுத்த போட்டியில் சென்னையும் வென்றால் பிளே ஆஃப் சுற்று பிரகாசமாக அதற்கு கிடைக்கும். இப்போதைக்கும் பிளே ஆஃப்க்கு தகுதியாயிருக்கும் ஒரே அணி மும்பை மட்டுமே.

பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் ஆசைக்கு குறுக்கே நிற்குமா ராஜஸ்தான்! #IPL #RRvsKXIP

இந்த இரு அணிகளுக்கான முதல் போட்டி ஷார்ஜாவில் நடந்தது. அதனால் ரன் மழையே பொழிந்தது.  முதலில் ஆடிய பஞ்சாப் அணியில் மயங் அகர்வால் அதிரடியாக ஆடி 50 பந்துகளில் 106 ரன்களும், கேப்டன் ராகுல் 69 ரன்களும், பூரண் 8 பந்துகளில் 25 ரன்களும் குவிக்க ஸ்கோர் 223 என்றானது.

பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் ஆசைக்கு குறுக்கே நிற்குமா ராஜஸ்தான்! #IPL #RRvsKXIP

அடுத்து ஆடிய ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், திவெட்டியா, ஸ்டீவ் ஸ்மித்தின் அதிரடி ஆட்டத்தால் 3 பந்துகள் மிச்சமிருக்கும்போதே 226 ரனகள் விளாசி வெற்றியை ருசித்தார்கள். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன் சேஸிங் செய்த டீம் என்ற பெருமையையும் புதிய சாதனையையும் ராஜஸ்தான் பதித்தது.

பஞ்சாப் அணியின் பிளே ஆஃப் ஆசைக்கு குறுக்கே நிற்குமா ராஜஸ்தான்! #IPL #RRvsKXIP

இன்றைய போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்பது தெரிந்த விஷயம்தான். ஆனால், கிங்ஸ் லெவன் பஞ்சாப் சமீப போட்டிகளில் அபரிமிதமான திறமையைக் காட்டி வருகிறது. இரண்டு சூப்பர் ஓவர்கள் ஆடி மும்பையைத் தோற்கடித்தது. கிறிஸ் கெயில் அணிக்குள் வந்ததும் யானை பலம் பெற்றதை போல இருக்கிறது. எனவே , இன்றைக்கு பஞ்சாப் வெல்ல சற்று வாய்ப்பு அதிகம் என்றாலும் கடும் சவாலை ராஜஸ்தான் கொடுக்கும்.