சென்னையின் வெற்றி இலக்கு 154 #ipl #CSKvsKIXP

 

சென்னையின் வெற்றி இலக்கு 154 #ipl #CSKvsKIXP

ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள்  முதல் போட்டிகளில் மோதும் அணிகள் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கிங்ஸ் லெவன் பஞ்சாப்.

 13 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 8 போட்டிகளில் தோற்றும் 5-ல் மட்டுமே வென்றதால், பாயிண்ட் டேபிளில் கடைசி இடமான எட்டில் உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை பொறுத்தவரை 13 போட்டிகளில் ஆடி, 6 போட்டிகளில் வென்று 5-ம் இடத்தில் உள்ளது. இன்றைய வெற்றி என்பது அந்த அணிக்கு மிகவும் கட்டாயமான ஒன்று.

சென்னையின் வெற்றி இலக்கு 154 #ipl #CSKvsKIXP

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மஹேந்திர சிங் தோனி, முதலில் பீல்டிங் செய்ய விரும்புவதாகச் சொன்னார். அதனால் பஞ்சாப் வீரர்கள் கே.எல்.ராகுலும் மயங் அகர்வாலும் ஓப்பனிங் இறங்கினார்கள். நிதானமாக ஆடியபோது,  லுங்கி நிகிடி வீசிய பந்தில் போல்டானார் மய்ங் அகர்வால். அவர் எடுத்த ரன்கள் 15 பந்துகளில் 26. எட்டாவது ஓவரில், 29 ரன்கள் எடுத்திருந்த நிலையில்  நிகிடி பந்தில் அவுட்டானார் கே.எல்.ராகுல்.

சென்னையின் வெற்றி இலக்கு 154 #ipl #CSKvsKIXP

அதிரடி பேட்ஸ்மேன்கள் கிறிஸ்கெயில் – பூரண் களத்தில் நிற்க, ரன்கள் குவியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பூரண் 3 ரன்களிலும் கெயில் 12 ரன்களிலும் அவுட்டாகினர். 14 ரன்களில் மந்தீப் சிங் அவுட்டானார். அவர் விக்கெட்டை வீழ்த்தியது ஜடேஜா. நீஷமும் 2 ரன்களில் திரும்பினார்.

சென்னையின் வெற்றி இலக்கு 154 #ipl #CSKvsKIXP

 இறுதியில் தீபக் ஹோடா 30 பந்துகளில் 62 ரன்களை விளாசியதும், பஞ்சாப் அணி பெரும் சரிவிலிருந்து மீண்டது. 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 153 ரன்கள் எடுத்திருந்திருந்தது. சென்னையில் வெற்றி இலக்கு