” மதுரையில் மன்னர்கள் கால வடிகால் முறை ” – செல்லூர் ராஜூ தகவல்

 

” மதுரையில் மன்னர்கள் கால வடிகால் முறை ”  – செல்லூர் ராஜூ தகவல்

மதுரையில் பாண்டிய மன்னர்கள் கால மழைநீர் வடிகால் முறை செயல்படுத்தப்படும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

” மதுரையில் மன்னர்கள் கால வடிகால் முறை ”  – செல்லூர் ராஜூ தகவல்

மதுரை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் , பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி நான்கு சித்திரை வீதிகளில் நடைபெற்று வரும் பணிகளை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரில் ஆய்வு செய்தார்.

அப்போது செய்தியார்களிடம் பேசிய அவர், மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.977 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடந்து வருவதாக தெரிவித்தார்.
தற்போது 8 பணிகள் நடைபெற்று வருவதாகவும், இவற்றை ஒவ்வொரு வாரமும் ஆய்வு செய்து வருவதாகவும் கூறினார்.

பெரியார் பேருந்து நிலையம், அதன் அருகில் சுற்றுலா தகவல் மையம், நவீன அங்காடி மையம் கட்டுமான பணிகள் வேகமான நடைபெற்று வருகிறது என்றும் குறிப்பிட்டார்.

” மதுரையில் மன்னர்கள் கால வடிகால் முறை ”  – செல்லூர் ராஜூ தகவல்

வைகை ஆற்று கரைகளை மேம்படுத்த, கரையின் இருபுறங்களில் இருவழிச் சாலையாக மாற்றும் பணிகளும் நடைபெற்று வருவதாகவும், கழிவுநீர் கலப்பதை தடுக்கும் வகையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணிகள் நடப்பாதாகவும் கூறினார். சித்திரை வீதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்கும் வகையிலும், மழைநீர் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் செல்லாத வகையில், 30 மீட்டர் மழைநீர் உறிஞ்சு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன என்றும் செல்லூர் ராஜூ கூறினார் .