பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து அவதூறு பேச்சு- தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு!

 

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து அவதூறு பேச்சு- தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு!

கோவை

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து அவதூறாக பேசியதாக, திமுக எம்.பி., தயாநிதி மாறன் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

கடந்த மார்ச் 29ஆம் தேதி அன்று கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பேருந்து நிலையம் பகுதியில், திமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து, அந்த கட்சியின் எம்.பி. தயாநிதி மாறன் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில், ஆளுங்கட்சியை சேர்ந்தவர்களும் ஈடுபட்டு உள்ளதாகவும், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் அவரது மகனுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் தயாநிதிமாறன் பேசியதாக கூறப்படுகிறது.

பொள்ளாச்சி ஜெயராமன் மகன் குறித்து அவதூறு பேச்சு- தயாநிதி மாறன் மீது வழக்குப்பதிவு!

இந்த விவகாரம் குறித்து, கோவை மாவட்ட எஸ்.பி-யிடம் பொள்ளாச்சி ஜெயராமன் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், பொள்ளாச்சி விவகாரத்தில் தனது மகன் குறித்து எந்த வித ஆதாரமும் இன்றி தயாநிதி மாறன் குற்றம்சாட்டி உள்ளதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இதனை தொடர்ந்து, புகார் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி., கிணத்துக்கடவு காவல் நிலைய போலீசாருக்கு, அறிவுறுத்தி இருந்தார். அதன்படி, இன்று தயாநிதி மாறன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறி தனிநபரை களங்கப்படுத்தும் விதமாக பேசியதாக, 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.