நம் வீட்டு கிச்சனில் இருக்கும் டெங்கு கொசுவுக்கு சங்கூதும் பொருட்கள்

 

நம் வீட்டு கிச்சனில் இருக்கும் டெங்கு கொசுவுக்கு சங்கூதும் பொருட்கள்

  

கொசுக்கள் இரவில் தூக்கத்தை கெடுப்பதோடு ,நம் ஆரோக்கியத்திற்கு எதிரியாகவும் மாறிவிடுகிறது . சமையல் அறை பொருட்களை கொண்டே வீட்டுக்குள் கொசுக்களின் படை எடுப்பை கட்டுப்படுத்திவிடலாம்.

நம் வீட்டு கிச்சனில் இருக்கும் டெங்கு கொசுவுக்கு சங்கூதும் பொருட்கள்

மேலும் கொசுக்கள் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா  போன்ற கொடிய நோய்களை பரப்பவும் செய்யும். இந்த கொடிய கொசுவை சமையல் அறை பொருட்களை கொண்டே  கட்டுப்படுத்திவிடலாம்.

1.வேம்பு: வேப்ப எண்ணெய்யின் வாசம் கொசுக்களுக்கு ஒத்துக்கொள்ளாது. தேங்காய் எண்ணெய் மற்றும் வேப்ப எண்ணெய்யை சம அளவு கலந்து கை, கால்களில் தேய்க்கலாம். இந்த எண்ணெய்யின் வாசம் எட்டு மணி நேரம் வரை நீடிக்கும். கொசுக்கள் உடலை நெருங்காது. வீட்டின் ஜன்னல், கதவுகளில் வேப்ப எண்ணெய் தெளித்தால் ,கொசுக்கள் ஓட்டம் பிடித்துவிடும்.

2.கற்பூரம்: வீட்டில் சாமி கும்பிடும்போது நிறைய பேர் கற்பூரம் உபயோகிப்பார்கள்.அப்போது  வழக்கத்தை விட சற்று கூடுதல் கற்பூரங்களை எரிய வைக்கலாம். கால் மணி நேரம் வரை கற்பூரங்களை எரிய விட்டால் கொசுக்கள் அண்டாது. கற்பூரத்தை நன்றாக அரைத்து அதனுடன் டர்பெண்டைன் எண்ணெய்யை கலந்து அறையில் ஆங்காங்கே தெளிக்கலாம். மேலும் ஸ்பிரேயாகவும் உபயோகித்தால்  கொசுக்கள் ஓடோடிவிடும். .

3.மிளகுக்கீரை: புதினா வகையை சேர்ந்த மிளகுக்கீரை செடியும் கொசுக்களுக்கு எதிரியாக விளங்கும். இது வேகமாக வளரக்கூடியது. வீட்டில் வளர்ப்பதாக இருந்தால் கூடுதல் பராமரிப்பு அவசியம். இல்லாவிட்டால் புதர்போன்ற தோற்றத்தை உருவாக்கிவிடும். செடியாக வளர்ப்பதற்கு பதிலாக மிளகுக்கீரை எண்ணெய்யை பயன்படுத்தலாம். அதன் வாசனை கொசுக்களின் வருகையை தடுத்து நிறுத்திவிடும்.

4.பூண்டு: கொசுக்களை விரட்டுவதற்கு பூண்டு மற்றும் வெங்காய செடியையும் பயன்படுத்தலாம். ஏனெனில் பூண்டு மற்றும் வெங்காய தண்டு பகுதியில் இருந்து வெளிப்படும் வாசம் கொசுக்கள், பூச்சி இனங்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்திவிரட்டி விடும்.